அதிக விளைச்சல் தரும் மானாவரி தீவன சோளம்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும் சதவீத மாவட்டங்களில் ஒவ்வொரு மழைப்பருவ காலங்களிலும் கால்நடை தீவனச் சோளப்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தீவன சோளப்பயிர்களுக்கு கோ-27 மற்றும் கே-10 ஆகிய ரகங்கள் உகந்ததாக கருத்தப்படுகிறது.
தீவனச்சோளப்பயிர்கள் வளர செம்மண் அல்லது கருமண் நிலங்கள் ஏற்றதாகும். செம்மண் நிலத்தில் ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும்போது, 30 கிலோ தழைச்சத்து, தலா 20 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தும் இட வேண்டும். கருமண் நிலமாக இருந்தால், தழைச்சத்து எக்டேருக்கு 40 கிலோவும், மணிச்சத்து 20 கிலோவும் இட வேண்டும்.

தீவன சோளப் பயிர்களை சாகுபடி செய்யும்போது, சாகுபடி செய்யும் நிலத்தை 2 முதல் 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பின் பண்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 சென்டி மீட்டர் இடைவெளியும் கொண்ட பார் அமைக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் போஸ்போ பாக்டீரியா மூலமாக விதை நேர்த்தி செய்து கொண்டு அடியுரமாக தொழு உரம் 25 டன்னும், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவற்றை இட வேண்டும். விதைத்து 25 நாட்கள் கழித்து 30 கிலோவும் தழைசத்து இட வேண்டும். அடியுரமாக தழைச்சத்து 45 கிலோவும், மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து தலா 40 கிலோ வீதம் இட வேண்டும்.

விதைத்த 20 நாட்கள் கழித்து களை எடுக்கலாம். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்ததாகும். விதைத்த 65 முதல் 70 நாட்கள் ஆன பிறகு ஒவ்வொரு மறுதாம்புப்பயிரும்60 முதல் 65 நாட்கள் இடைவெலியில் அறுவடை செய்யலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports