கோடையில் சாகுபடி செய்ய மானியத்தில் காய்கறி விதைகள்மானாவாரி பயிர்களான தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, உளுந்து, மொச்சை, சோளம், நிலக்கடலை உள்ளிட்டவை மழையை நம்பி விதைக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பருவமழை என்பது குறைவாகவே உள்ளது. போதிய மழைப்பொழிவு இல்லாததால், மழையை நம்பி விதைக்கப்படும் மானாவாரி சாகுபடி இந்த ஆண்டு நிறைந்துள்ளது.

இருப்பினும் மானாவாரி சாகுபடியில்  கோடை காலத்தில் எப்படி சாகுபடி செய்வது என்று விவசாயிகள் எண்ணுகின்றனர். மானாவாரி நிலமுள்ள விவசாயிகளின் எண்ணத்தை நிறைவேற்ற, கோடையில் காய்கறி சாகுபடி செய்வதற்கான விதைகளை தோட்டக்கலை முன்வந்துள்ளது. சொட்டுநீர் பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் காய்கறி விதை வினியோகிக்கப்படுகிறது. விதைக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்வதற்காக உள்ள தக்காளி,வெண்டை, பாகற்காய் போன்ற விதைகளும், வாழை, நெல்லி, திசுவாழை போன்ற நாற்றுகளும் இதில் அடங்கும்.

தற்போது வெளி மார்க்கெட்டில் சாகர் ரக விதை ஒரு கிலோ ரூ.160, ராசி-20 ரக வெண்டை கிலோ ரூ.1416, வினை ரகம், கொண்ட பாகற்காய் கிலோ=2601 ஆக உள்ளது. அதுபோல் திசு வாழை ஒரு கன்று ரூ.14, கொத்தமல்லி எவர்கிரீன் ரகம் ஒரு கிலோ ரூ.2601 ஆக விலை நிர்ணயம் உள்ளது. இவை அனைத்தும் வேளாண் தோட்டக்கலைத்துறையில் மூலம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

கோடையில் விதைக்கத் தேவைப்படும் காய்கறி விதைகளை மானாவாரி நிலமுள்ள விவசாயிகள், தங்கள் நிலத்திற்கான வரைபடம், சிட்டா அடங்கல், ரேஷன்கார்டு ஜெராக்ஸ், வங்கி கணக்கு ஜெராக்ஸ், விஏஒ., சான்று 3 போட்டோ என உரிய ஆவணங்களை, அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலைதுறை அலுவலகத்துக்கு நேரடியாகக் கொடுத்து விதைகளை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நேரத்தில் மேற்கண்ட காய்கறிகளை விதைத்து தழைச்சத்து, சாம்பல்சத்து மற்றும் மணிச்சத்து போன்றவற்றை, செடிகளின் வயதிற்கேற்ப உரங்களை நன்கு கலந்து விதை நேர்த்தி செய்தால் விவசாயிகள் குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்து நல்ல லாபம் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports