தரமான கொப்பரையை தயார் செய்வது எப்படி?



கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நல்ல தரமான கொப்பரைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகள் பின்வருமாறு..

1.   தேங்காய்கள் நன்கு முற்றிய பின் பறித்த ஹைபிரிட் ரக வகைகளுக்கு 45 முதல்60 நாட்களுக்குள், நாட்டு ரக வகைகளுக்கு45 முதல் 60 நாட்களுக்குள், நாட்டு ரகங்களுக்கு 45 முதல் 70 நாட்களுக்குள்ளும் உலர வைத்த பின்னர் , உடைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். முதலில் மண்களத்தில் சுமார் மூன்று நாட்களும், பின் கடப்பா கல்லில் சுமார் 4 முதல் 7 நாட்கள் காய வைக்க வேண்டும்.
2.   கொப்பரை ஈரப்பதம்6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
3.   பூஞ்சான தாக்குதல், கருப்பு, மஞ்சள் நிறமானவைகளை கழிவு செய்திடல் வேண்டும்.
4.   தேங்காய் பருப்பில் சுருக்கம் மற்றும் மடிப்பு 10 சதவீதத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
5.   நன்கு உலர்ந்த பின் பருப்பில் படிந்துள்ள மணல் தூசி, சருகுகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
6.   தேங்காய் பருப்பு நன்கு வெள்ளையாக இருக்க வேண்டும்.
7.   உட்புறம் சவ்வுதான் பொருத்திய சாக்கு பைகளில் சேமித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நவீன முறைப்படி, பாதுகாப்புடன் காயவைத்து சரியான மற்றும் விற்பனை செலவுகள் இல்லாமல் கூடுதல் பயனடைய விற்பனைக்குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறார்.  
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports