கறவை மாடுகளைத் தாக்கும் பால் ஜூரம்

நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கறவைப் பசுக்களை முறையாக பராமரிக்காவிட்டால் வரும் பாதிப்புகள் ஏராளம்.கறவை மாடுகளில் பால் ஜூரம் எனப்படும் ஒருவிதமான பக்கவாத கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் பாதிக்கிறது. கறவை மாடுகளுக்கு ஏற்படும் சுண்ணாம்பு  சத்தின் குறைபாட்டால் இந்நோய் ஏற்படுகிறது. சுண்ணாம்புச்சத்தின் குறைபாட்டால் பசுக்களின் தசை நார்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு மாடுகள் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்படும்.

அதிகளவில் பால் தரும்  பசுக்களையே இந்நோய் தாக்குகிறது. பொதுவாக கறவை மாடுகள் சினையாய் இருக்கும் போது அதிகளவில் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து தேவைப்படுகிறது. வளரும் கன்றின் எலும்பு வளர்ச்சிக்காக  தாயின் உடலில் இருக்கும் கால்சியத்தை கருவில் உள்ள கன்று எடுத்துக் கொள்கிறது. மேலும் கன்று ஈன்றதும், சீம்பால் வழியாக ஏராளமான கால்சியமும் கறவை மாட்டிம் குறைந்து இந்நோய் காணப்படுகிறது. இந்நோய் பாதிப்பு மூன்று நிலைகளில் காணப்படுகிறது. முதல் நிலையில் பசுக்கள் அதிர்ச்சியடைந்தும், தொடும் போதும் அதிக உணர்ச்சி வசப்படும், தலை மற்றும் கால் தசைகளில் நடுக்கம் கண்டு வாதம் ஏற்படும்.பாதிக்கப்பட்ட மாடுகள் நகராது. தீவனம் உண்ணாது. நாக்கு தொங்க விட்டு காணப்படும். பின்னங்கால்கள் விறைப்புடன் இல்லாமல் வளைந்து கீழே விழும் நிலையில் இருக்கும்.

இரண்டாம் நிலை முற்றிய வடிவில் கானப்ப்டும். கழுத்து மடக்கப்பட்டு, அசை போடுதல் நின்றிருக்கும். கண்களில் மிரட்சியுடன், மூச்சுத்திணறல் ஏற்படும். மூன்றாம் நிலையில் மாடுகள் பக்க வாட்டில் படுத்துக் கொண்டு சுவாதீனமற்ற நிலையில் காணப்படும். கால்கள் குளிர்ச்சியடைந்து காணப்படும். நாடித்துடிப்பை உணர முடியாது.

இந்நோய்களில் இருந்து பசுக்களைக் காக்க கால்நடை மருத்துவரின் உதவிடன் கால்சியம் கோரோ குளுக்கோனேட் என்ற மருந்தை ரத்தத்தில் செலுத்த வேண்டும். சிறிதளவு மருந்து உள்ளே சென்ற உடனேயே முகம் வியர்த்து மாடு நல்ல நிலைமைக்குத் திரும்பும். பெரும்பாலும் நோயின் முதல் நிலையிலேயே கவனித்து சிகிச்சை அளிப்பது சிறந்தது. நல்ல நிலைக்குத் திரும்பும்போது. சாணம் கழிக்கும். சிறுநீர் கழிக்கும்.

மாடுகள் சினையுற்று இருக்கும்போது சுண்ணாம்புச்சத்து குறைவான தீவனங்களையே மாடுகளுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தை இரத்த்த்திற்கு கொண்டு வர முடியும். இதன் காரணமாக இரத்த்த்தில் உள்ள  கால்சியத்தின் அளவு முறையாக பராமரிக்கப்படும். தீவனத்தில் அதிகளவு சுண்ணாம்புச்சத்துள்ள தீவனங்களை சினைகாலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.சினைக்காலத்தின் கடைசிப்பகுதியில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் உதவியுடன் வைட்டமின் டிஎன் மருந்தை 20 முதம் 30 மில்லியன் யூனிட் அளவில்  ஊசி மூலம் செலுத்தலாம். பண்ணைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை  பிரித்து அதற்கு தகுந்தபடி மருத்துவ ஆலோசனையுடன் நடவடிக்கை எடுப்பது நல்லது. கன்று சுண்ணாம்பு நீரை அரை லிட்டர் வீதம் குடிநீருடன் கலந்து அளிப்பதன் மூலம் நோயின் பாதிப்பை குறைக்கலாம்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports