சத்துள்ள சாத்துக்குடி

எப்போதும் கிடைக்க கூடிய பழங்களுள் ஒன்று சாத்துக்குடி. வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள சாத்துக்குடியில், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்றவையும் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைக்கு சாத்துக்குடி மிகவும் நல்லது. சாத்துக்குடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன.
உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பவை பழங்கள் மட்டுமே. உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதிகளில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பழங்கள் உதவிபுரிகின்றன. சீதோஷ்ண காலங்க்ளில் விளையும் பழங்களை உண்டாலே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் சாத்துக்குடி பழம் உடலுக்கு பலத்தை தருவதோடு ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்கின்றனர்.

இதயம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது. செரிமான சக்தியுள்ள இந்த சாத்துக்குடி ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுள்ளது. நமது தோலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது சாத்துக்குடி. சிகிச்சை பெற்று வருபவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி புத்துணர்வுடன் செயல்பட சாத்துக்குடி ஜூஸ் உதவுகிறது. ஏராளமான நன்மைகள் கொண்ட சாத்துக்குடியை சாப்பிட்டு நாமும் பயன்பெறலாமே.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports