சின்னசின்ன செய்திகள்


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலிருந்து பழப்பயிர்களில் 33 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சப்போட்டா ரகங்களான பி.கே.எம்.1, பி.கே.எம்.4, பி.கே.எம்.5, பப்பாளி ரகங்களான கோ.2, கோ.7, நெல்லி ரகம் பி.எஸ்.ஆர்.1, அருப்புக்கோட்டை சீதா 1 ரகம் ஆகியவை இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வாழையில் நூற்புழு எதிர்ப்பு ரகங்களான எச்.212, எச்.531, எச்.9617, என்.பி.எச்.02-01 ஆகியவை இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.
மஞ்சள் நாற்று நடவு:

பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது.


பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது. விதைக்கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும். நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும். 8ம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம். 
மா:

அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம். இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும். தற்போது அதிஅடர்நடவு முறையில் 3x2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


டிசம்பர் - ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக்கவாத்து செய்வதன் மூலமாகவும் அதையொட்டி பேக்லோபூட்ரசால் 0.75 கிராம்/மரம் என்ற அளவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப்பருவ காய்ப்பை பெறலாம். இலைவழியாக 20 கிராம்/லிட்டர் தண்ணீர் அளவில் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைப் பூக்கும் தருணத்திலும் பின் காய்பிடிப்பு தருணத்திலும் தெளிப்பதன் மூலமாக காய்பிடிப்பினை அதிகரிக்கச் செய்வதோடு விளைச்சலையும் அதிகரிக்கலாம்.
வாழை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திசுவளர்ப்பு வாழைகளே பயிரிடப்பட்டு வருகின்றன. வாழையில் அடர்நடவு முறையில் 1.8x3.6 மீட்டர் இடைவெளியில் 3 கன்றுகள் குழிக்கு நடவு செய்வதன் மூலம் எக்டருக்கு 4630 கன்றுகள் நடவு செய்ய முடியும். இம்முறையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் உரமிடுவதால் விளைச்சல் எக்டருக்கு 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம். நீர்த்தேவையும் உரத்தேவையும் குறைக்கப் படுவதால் அதிகம் லாபம் பெறலாம்.
வாழையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை:மணி:சாம்பல் சத்து 110:35:330 கிராம்/மரம் என்ற அளவை அடர்நடவு முறையில் ஒரு குழியில் உள்ள 3 கன்றுகளுக்கு அளிக்கும்போது 75 சதவீத உரங்களை அளித்தாலே போதுமானது. அதாவது ஒரு குழிக்கு (3 கன்றுகள்) தேவையான உர அளவு 247.5 : 78.75 : 742.5 கிராம் தழை, மணி, சாம்பல் சத்து மட்டுமே நீர்வழி உரமிடல் மூலம் பகிர்ந்தளிக்கலாம்.


வாரங்கள் - தழை(%) - மணி(%) - சாம்பல்சத்து(%)
9-18 (10 வாரங்கள்) - 30 - 100 - 20
19-30 (12 வாரங்கள்)- 50 - 0 - 40
31-42 (12 வாரங்கள்) - 20 - 0 - 32
43-45 (13 வாரங்கள்) - 0 - 0 - 8
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports