மணிலா விதைகள் தட்டுப்பாடு: விவசாயிகள் புகார்

மணிலா விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வெளிமாநிலங்களிலிருந்து மணிலா விதைகளை தருவித்து தரவேண்டும் என்று வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மினி தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் விஸ்வநாதன், ஜெயராமன், வட்ட வழங்கல் அலுவலர் நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் செயல்பட வேண்டும். அரசு நடத்தும் உழவர் தினவிழாக்களில் பங்கேற்க விவசாயிகளை சரிவர அழைப்பதில்லை. வேளாண்மைத் துறையினர் விவசாயிகளுக்கு திட்ட விளக்க கையேடுகளை வழங்குவதில்லை என்பன உள்ளிட்ட குறைகளை விவசாயிகள் தெரிவித்தனர்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports