களை எடுக்க புதிய கருவிகள்

 மாக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள 3 வகையான கருவிகள்

* ரோட்டோமாக்ஸ் வீடர் (டீசல்) - 6 எச்பி சக்தி கொண்ட இக்கருவியைக் கொண்டு தோப்புகளில் களை எடுக்கலாம். தென்னை, மாந்தோப்பு, தேக்கு, நெல்லி போன்ற தோப்புகளில் உள்ள களைகளைக் கட்டுப் படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 30-40 சென்ட் வரை களை எடுக்கலாம். ஏக்கருக்கு 2 லிட்டர் டீசல் மட்டும் போதுமானது. நிலத்தில் 30 சதவீதம் ஈரம் அவசியம்.

* ரோட்ரிடில்லர் (பெட்ரோல்) - 6.5 எச்.பி. சக்தி கொண்ட இந்தக்கருவி இரண்டரை அடி இடைவெளியில் நடவு செய்யப்படும். அனைத்து பயிர்களிலும் களை எடுக்கலாம். கரும்பு, வாழை, சவுக்கு, மல்லி போன்ற பயிர்களில் களை எடுக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். நிலத்தில் 30 சதவீதம் ஈரப்பதம் அவசியம்.

* பவர் வீடர் (பெட்ரோல்) - 2 எச்.பி. சக்தி கொண்ட இந்தக்கருவி மிகக்குறைந்த இடைவெளியில் பயிரிடப்படும் பயிர்களில் நெற்பயிர், சூரியகாந்தி, வேர்க்கடலை, மஞ்சள் போன்ற பயிர்களில் களை எடுக்க பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 10-15 சென்ட் வரை களை எடுக்கலாம். நிலத்தில் 30 சதவீதம் ஈரப்பதம் அவசியம்.


Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports