தென்னையில் நோய் மற்றும் பூச்சி தடுப்பு


தென்னங்கன்றைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த:

தென்னங்கன்றுகளை கரையான் மற்றும் நூற்புழு தாக்கி சேதப்படுத்தும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இளம் தென்னங்கன்றுகளுக்கு அருகில் சோற்றுக்கற்றாழை கன்றுகளை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்களைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு பாதிப்பிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுக்காக்கலாம்.
தென்னையில் நோய்த் தடுப்பு வழிமுறைகள்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, தற்போது பருவநிலை மாற்றங்கள் நிலவுவதால் தென்னை சாகுபடி விவசாயிகள் நோய்த் தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்த:
ஒரு பங்கு போரேட் குருணை மருந்தை 10 பங்கு குறு மணலுடன் கலந்து குருத்துக்குக் கீழேயுள்ள மூன்று வரிசை மட்டை ஒடுக்குகளில் இட்டால், இந்த வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்த மருந்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடுவது சிறந்தது.
சிவப்புக்கூண் வண்டு கட்டுப்படுத்த :
இந்த வண்டு தாக்குதலை முன்கூட்டியே த்டுக்க மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன், அதே அளவு தண்ணீர் கலந்து மரத்தின் வேர் மூலம் 45 நாள்கள் இடைவெளியில் இரண்டிலிருந்து மூன்ரு முறை இடவேண்டும்.
இந்த வண்டு தாக்கிவிட்டால் அது ஊடுருவிய துவாரத்தின் வழியாக இரண்டு அலுமியம் பாஸ்பைடு மாத்திரைகளை போட்டு துளைகளை மணல் சிமெண்ட் கலவை கொண்டு அடைக்கவேண்டும். ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு மாத்திரையை துளையில் இட்டு அடைக்கலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports