வேளாண் பல்கலை. சார்பில் சூப், சாலட் தயாரிப்புப் பயிற்சி


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சூப், சாலட் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் அக்டோபர் 9 நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தக்காளி சூப், கிளியர் வெஜ் சூப், கிரீமி மஷ்ரூம் சூப், ஸ்வீட் கார்ன் சூப், ஃபிரஞ்ச் ஆனியன் சூப், கிரீன் சாலட், வெள்ளரி பச்சடி, தக்காளி குடமிளகாய் சாலட், முளை கட்டிய பயிறு சாலட் ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், 30-யு, 10-வது தெரு, அண்ணா நகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports