வருத்தப்பட்டு கருத்து சொல்லும் பிரணாப் முகர்ஜி ..! உழவன் மகன் உழவனாக வரவில்லையாம்..? ஈழதேசம் பார்வையில்..! Agriculture

விவசாயிகள் விதர்பாவில் லட்சக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். எப்பொழுது பத்து வருடங்களுக்கு முன்பு அல்ல..வருடம் தோறும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் அல்ல. பீகாரில் ஜார்கண்டில், ம.பி.யில், உ.பி.யில், க.பி.யில், ஆ.பி.,யில் விவசாய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் இன்று இந்தியா முழுதும் விபச்சாரத்தில் இறங்கி, தங்களின் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு..? 
இந்த உ.பி. ம.பி. க.பி.ஆ.பி. இவர்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள் வட கிழக்கு மாநிலத்தின் பெண்கள் என்று தெரியுமா உங்களுக்கு..? வட மாநிலங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம், இளமை இருக்கும் வரை பணம் சம்பாதித்து குடும்பத்தினரை காப்பாற்றி விட்டு தாங்கள் அழிந்து
விடுகிறார்கள். கிடக்கட்டும் இவைகள்..! 

நம்ம இந்திய ஜனாதிபதி உயர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார், ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு அரசியல்வாதியாகவே வர விரும்புகிறான். அனால் ஒரு விவசாயி மகன் ஒரு விவசாயியாக வர விரும்புவதில்லை என்கிற செய்திகளை இப்பொழுதெல்லாம் நாம் கேட்க
முடிகிறது என்று கூறியதோடு நிற்காமல் இவ்வாறு வேறு கூறியுள்ளார் நம்ம ஜனாதிபதி முகர்ஜி அவர்கள். " சமுதாய போக்கினை புரிந்து கொள்ளாமையே இதற்கு காரணம் " என்கிறார் பிரணாப்.

முதலாவது பசுமைப் புரட்சியில் நாம் அதிகமாக உரங்களைப் பயன்படுத்தியதால் மண் வளம் குறைந்து, நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. பன்னாட்டு மக்கள் சமூதாயத்தினர் சுற்றுச் சூழலை மிக மோசமாக மாசுபடுத்தி விட்டனர் என்கிறார். புனிதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள். 

என்னங்கையா..! உங்கள் புனிதமான நடவடிக்கை..? உங்கள் குரு மண் மோகன் சிங் அவர்கள் கூறுகிறார் இவ்வாறு, இந்தியாவில் தேவையில்லாமல் அதிகப்படியான மக்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்று. சுமார் பத்து சதவீத மக்கள் விவசாயம் செய்தால் போதுமானது என்கிறார். அதாவது பண்ணை விவசாயம் செய்ய வேண்டும் என்கிறார். பண்ணை விவசாயம் என்றால் ஒரு பண்ணை விவசாயம் செய்பவருக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்..! 

எனவே, பொத்தாம் பொதுவாக கருத்து சொல்கிறார் பிரணாப் முகர்ஜி அவர்கள். விவசாயி மகன் விவசாயியாக வர விரும்பவில்லையாம். எப்படி இருக்கிறது கதை..? விவசாயம் செய்பவனையெல்லாம் கருணையே இல்லாமல் காயடித்து விட்டு, தூக்குப் போட்டு சாகாமல், தான் வைத்திருக்கும் உர மருந்தை குடித்து விட்டு குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வழி வகைகளை செய்து கொடுத்து விட்டு, இதை மீறி தற்கொலை செய்து கொள்ள மன நிலையே இல்லாதவர்கள் இன்று தமிழகமெங்கும் குடும்பம் குடும்பமாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்கொலையை விட இது தேவலாம்..! என்று கருதி இந்த கடும் துயர பயணத்தை மேற்கொள்கிறார்கள் அந்த விவசாயிகள்.

ஆனால் இவர்களின் தற்கொலை என்பது நிரந்தர தீர்வு. இந்த மாதிரியான பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை அணைத்து அற நெறிகளையும் கொண்ட விவசாயியை மிகவும் காயப்படுத்தி பெரும் துயரத்தில் ஆழ்த்தி விடும் என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க முடியாது என்பது தான் மனித இனத்தின் மிகப்பெரும் சோகம்..! தன் கண் முன்னே அணைத்து அற நெறிகளும் முறிந்து, தன் குடும்ப உறுப்பினர்களே அணைத்து வித நெறி முறைகளுக்கும் எதிராக மாறும் அவலத்தை காணும் துயர நிலையை அடைகிறான் அந்த விவசாயி. இவ்வாறாக தனது அணைத்து மதிப்பீடுகளையும் இழந்து, அதையும் தன் வாழ்நாளில் கண்டு உணர்ந்து இறுதியில் மரணத்தை எய்துவதற்கு விதர்பா விவசாயிகளின் முடிவுக்கு வந்து விடலாம் இந்திய விவசாயிகள் இடம் பெயராமல். 

இவ்வாறான நிலையில் கருத்து சொல்கிறார் பிரணாப் முகர்ஜி அவர்கள். விவசாயிகள் சமுதாய போக்கினை புரிந்து கொள்ளவில்லை என்று. மிக உச்சத்தில் இருக்கிறார்கள் மனித விரோத செயல்களில்.. மனிதர்களை கொல்ல வேண்டும்.... அழிக்க வேண்டும்.... என்று அடிமனதில் மிகப்பெரும் விருப்பம் கொண்டவர்களாக கார்ப்பரேட் அரசியல்வாதிகள் ஊதிப் பெருத்து விட்டார்கள் என்றே கருதலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சங்கிலிக்கருப்பு 
Agriculture in india, agriculture news, agriculture information,Farming machinery
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports