வாழையின் பயன்கள்


வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள்:

  • பொட்டாசியம் சத்து அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ்குளுக்கோஸ்ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.
  • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள ட்ரைபோடோஃபான் என்னும் ஒருவகை புரதம் நம் உடலில் சேரும்போது செரடோனின் என்ற பொருளாக மாறுகிறது. இது உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
  • வாழைப்பழங்கள் 12 'C க்கும் குறைவான வெப்பநிலையில் கருக்கத் தொடங்கிவிடும். எனவே முழு வாழைப்பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லதல்ல. உரித்த வாழைப்பழங்களை காற்றுப்புகாதவாறுஉறைகுளிர் பெட்டியில் நெடுநாட்கள் வைத்திருக்கலாம்.
  • வாழைக்காய் மற்றும் வாழைப்பத்தை மெல்லிய துண்டுகளாக சீவி, வாழைப் பொரிப்புகள் செய்யப்படுகிறது. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை சமையலுக்கு பயன் படுத்தப்படுகின்றன. வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் ஏற்படும் கற்களை நீக்க வல்லது என நம்பப்படுகிறது.
  • வாழை இலை இந்தியாவில் உணவு உண்ணும் தட்டு போல பயன்படுகிறது.
  • அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் வாழைமரங்கள் வெட்டி நிலத்தில் சாய்த்து மக்க விடப்படுகின்றன. வாழை மரத்தண்டுகள் உரங்களை சேமித்து வைத்திருப்பதால், இவை நல்ல உரமாகப் பயன் படுகின்றன.
  • வாழைப்பூ, காய், தண்டு முதலியவை சித்த மருத்துவத்திலும் பயனாகிறது. நீரிழிவு என்ற உடற்குறை உள்ளவர்கள், வாழைப்பூ அவியலை உண்பது மிகவும் நல்லது.
  • வாழைப்பட்டைகளை உலர வேத்து அதிலுள்ள நார்களைப் பிரித்தெடுத்து மலர் மாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்துவர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports