எலுமிச்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்


I.சாறு உறிஞ்சும் பூச்சிகள்
II. இலை உண்ணும் பூச்சிகள்

I.சாறு உறிஞ்சும் பூச்சிகள்
1. எலுமிச்சை அசுவினி :
கருப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா சூரன்டி 
பழுப்பு அசுவினி : டாக்ஸ்டோப்டிரா சிட்ரிஸிடா

அறிகுறிகள் :

இளம் இலைகள் மற்றும் பூக்களை உண்ணும்.
டிரைஸ்டிகா நச்சுயிரி நோயை பரப்பும்.
இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சும்.
செடிகள் வாடும், பூக்கள் வாடி தொங்கும்.
தாக்கப்பட்ட இலைகள் கிண்ண வடிவில், சுருக்கங்களுடன் காணப்படும்.
செடிகளின் வளர்ச்சி தடைப்படும்.                       


பூச்சியின் விபரம் :
கட்டுப்பாடு :
 • மஞ்சள் ஒட்டுப் பொறியை பயன்படுத்துதல்
 • மீத்தைல் டெமட்டான் (மெட்டாஸிஸ்டாக்ஸ்) (அ) டைமெத்தோயேட் (ரோகர்) 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
 • காக்ஸிநெல்லிட் வண்டுகள், ஸிரிபிட் ஈக்களை பயன்படுத்துதல்

2. எலுமிச்சை கருப்பு ஈ, அலிரோகேன்தஸ் வோக்லுமி

சேதத்தின் அறிகுறி:
 • இலைகளில் சாறு உறிஞ்சப்படுவதால் மஞ்சளாகிவிடும்
 • இலைகளின் மேல் படிந்த பூச்சியின் கழிவின் மீது கருநிற பூசணம் வளரும்
 • இலைகள் கொட்டும்


பூச்சி:
கருப்புநிற பூச்சிகள் செதிள்கள் போன்று இலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்.


3. எலுமிச்சை சாறு உறிஞ்சும் குதிக்கும் அசுவினி : டைபோரினா சிட்ரி
அறிகுறிகள் :
 • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் செடியின் சாற்றை உறிஞ்சும்.
 • இளம் பூச்சிகள் அதிக அழிவைத் தரும். நுனியில் உள்ள கிளைகளில், மொட்டுக்கள், இளம் இலைகளில் கூட்டமாக இருக்கும்.
 • தேன் சுரப்பு வெளிவருவதால், கரும் பூசண வளர்ச்சியுடன் காணப்படும்.
 • தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து, பின் மடியும்.
 • பச்சையாதல் நச்சுயிரி நோயை கடத்தும் காரணியாக உள்ளது.

முட்டை – பாதாம் பருப்பு வடிவத்தில், மஞ்சள் நிறத்துடன்,பகுதி திறந்த இலைகளில் காணப்படும்.பூச்சியின் விபரம் :
 • இளம் பூச்சிகள் – தட்டையாக, முட்டை வடிவத்தில், ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
 • பூச்சிகள் – சிறியதாக, பழுப்பு நிறத்தில், பழுப்பு நிற வளையம் முன்னிறக்கையில் காணப்படும்

மேலே
கட்டுப்பாடு :

தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.
மாலத்தியான் 0.05% (அ) மோனோகுரோட்டோபாஸ் 0.036% (அ) கார்பைரில் 0.1% (அ) மீத்தைல் பாரத்தியான் 0.05% தெளித்தல்.
இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்.
4. மாவுப்பூச்சி, ப்ளானோகாக்ஸ் சிட்ரி
சேதத்தின் அறிகுறி
 • இலைகளில் சாறு உறிஞ்சப்படுவதால் மஞ்சளாகிவிடும்
 • இலைகளின் மேல் படிந்த பூச்சியின் கழிவின் மீது கருநிற பூசணம் வளரும்
 • இலைகள் கொட்டும்
பூச்சி:

முட்டைவடிவ மஞ்சளான மாவு போன்ற பூச்சிகள் இலைகள், கிளைகள், காய்களில் ட்டிக் கொண்டிருக்கும்.

தடுப்பு:
 • மானோகுரோட்டோபாஸ் 25 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
 • கிரிப்டோலீமஸ் மாண்ட்ரோசியரி எனும் இரைவிழுங்கி வண்டுகளை மரத்திற்கு 10
  பூச்சிகள் வீதம் விடலாம் அல்லது ஏக்கருக்கு 1000 – 2000 வண்டுகள் விடலாம்.

5. பழச்சாறு உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சி,
 ஒக்ரிஸ்  புல்லொனிக்கா, ஓ.மெட்டர்னா 

சேதத்தின் அறிகுறி:

இரவு நேரங்களில் அந்துப்பூச்சிகள் ஊசி போன்ற வாய்க் குழலால் பழங்களைக் குத்திச் சாற்றை உறிஞ்சுவதால் பழங்கள் அழுகி நாளடைவில் உதிர்ந்துவிடும்.

அந்துப்பூச்சி பெரியதாக பழுப்பு நிற முன் இறக்கையில் திட்டுத்திட்டான கோடுகளுடனும் ஆரஞ்சு நிற பின் இறக்கையில் பெரிய கருப்புப் புள்ளியையும் (ஓ. மெட்டர்னா) கொண்டிருக்கும். கருப்புப் புள்ளிகள் அரை வட்டமாக கொண்டிருக்கும் ஓஃபுல்லோனிக்காபூச்சி:
 • புழு 50 மி. மீ நீளமாக மஞ்சள், நீல, ஆரஞ்சு நிறப் புள்ளிகளுடன் டீனோஸ்போரா கார்டிஃபோலியா என்ற களைச் செடிகளில் காணப்படும். இது காவடிப்புழு வகையைச் சார்ந்தது.

தடுப்பு:
 • புழுக்கள் வாழும் களைகளை அழித்தல்
 • விளக்குப்பொறி வைத்து அந்துக்களைக் கவர்நதழித்தல்
 • இரவில் புகை மண்டலம் ஏற்படுத்தி அந்துக்களை விரட்டுதல்
 • பழங்களை (வீட்டுத் தோட்டங்களில்) பாலிதீன் பை கொண்டு மூடி வைத்தல் (காற்றுப் புக சிறு துளைகள் இருக்க வேண்டும்).

6. எலுமிச்சை இலைப்பேன், திரிப்ஸ் நில்கிரியன்ஸிஸ்

அறிகுறிகள் :
 • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைத் திசுக்களை சுரண்டி, பழங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 • இலை சுருளுதல்
 • பழங்களில் வளையம் போன்ற தோற்றம்
 • ஒழுங்கற்ற பல்வண்ண திட்டுக்கள் பழங்களில் காணப்படுதல்

மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பூச்சி:

தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
கட்டுப்பாடு :
 • செடி நன்றாக வளரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.
 • மாலத்தியான் 0.05% (அ) மோனோகுரோட்டோபாஸ் 0.036% (அ) கார்பைரில் 0.1% (அ) மீத்தைல் பாரத்தியான் 0.05% தெளித்தல்.
 • இயற்கை எதிரிகளான ஸிர்பிட்ஸ், க்ரைசோபிட்ஸின் நடமாட்டத்தை ஊக்குவித்தல்.                         

7. பஞ்சு செதில் பூச்சி : ஐசிரியா பர்கேசி

அறிகுறிகள் :
 • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
 • தேன் சுரப்பு வடிதல்
 • கரும்பூசண வளர்ச்சி தோன்றுதல்

வெள்ளையாக வரி போன்ற கூட்டமாக 800 முட்டைகளுடன் காணப்படும்.பூச்சியின் விபரம்
 • இளம் பூச்சிகள் சிவப்பு நிற உடலுடன் கருப்பு நிற கால்களுடன் காணப்படும்.
 • பூச்சிகளின் மேல்வெள்ளை நிற ரோமங்களால் சூழ்ந்திருக்கும்.
கட்டுப்பாடு :
 • பனிக்காலத்திற்கு பின், வசந்த காலத்திற்கு முன் மணமற்ற எண்ணெணை தெளிக்க வேண்டும்.
 • தோட்டபயிர் எண்ணெணை, தேவைப்பட்டால் தெளிக்கலாம்.
 • உரகம்போஸ்ட் தேயிலை, கரும்பு ஆலை கழிவுகள், எலுமிச்சை எண்ணெய் கலவையை அளிக்கலாம்.
 • பூண்டு – மிளகு தேநீரையும் தெளிக்கலாம்.
 • இயற்கை இரை விழுங்கிகளை தோட்டங்களில் விடலாம்.
 • எறும்புகளை கட்டுபடுத்து பூச்சி மருந்தை தூவ வேண்டும்.
 • வெடேலியா மற்றும் ஆஸ்திரேலியன் பூச்சிகளை தோட்டங்களில் வெளிவிடலாம்.

8. இலை துளைப்பான் : பில்லோக்னிஸ்டிக் சிட்ரில்லா

சேதத்தின் அறிகுறி:

இலைகள் மீது மினுமினுக்கும் வளைந்த வெண்கோடுகள் தெரியும். இலைகள் பலவாறு சுருங்கி வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

தாய்ப்பூச்சி சிறியதாக முன் இறக்கைகளின் நுனியில் ஒவ்வொன்றிலும் ஒரு கரும்புள்ளியுடன் இருக்கும்.பூச்சி
 • புழு மிகச்சிறியதாக கால்கள் இன்றி இலையின் மேற்புறத்தில் உள்ள மெல்லிய தோலுக்கும் கீழே காணப்படும்.
தடுப்பு:
 • அஜினியேஸ்பிஸ் (Ageniaspis sp) எனும் புழு ஒட்டுண்ணி இயற்கையிலேயே புழுக்களை கட்டுப்படுத்துகிறது.
 • வேப்பம் பிண்ணாக்கு நீர் (அ) வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் (50 மிலி / 1 லி) நீர் கலவை தெளிக்கலாம்.

9. எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி, பாப்பிலியோ, டிமோலியோஸ், பி.பாலிடிஸ். பி. ஹீலென்ஸ்
 • வண்ணத்துப்பூச்சி மிக அழகான பச்சைநிற இறக்கையில் மஞ்சளும் கருமையுமான புள்ளிகளுடன் இருக்கும்
 • இலைகளின் மீது இளம் புழுக்கள் பறவைகளின் எச்சம் போல காணப்படும். புழுவின் உடலில் பழுப்பு நிறதத்தில் வெள்ளைக் கோடுகள் திட்டுத்திட்டாக இருக்கும்
 • முழு வளர்ச்சியடைந்த புழு பச்சையாக இருக்கும். எதிரிகளை தாக்கும் போது புழு தற்காப்புக்காக இரண்டு சிவப்பு நிறக் கொம்புகளை வெளியில் நீட்டி ஒரு வித வாசனையைப் பரப்பும்

பூச்சியின் விபரம் :
சேதத்தின் அறிகுறிகள்

இலைகளைக் கடித்து சேதப்படுத்தியிருக்கும்


தடுப்பு
 • கீழ்க்கண்ட ஒட்டுண்ணிகள் சிறந்த இயற்கையான கட்டுப்பாட்டை தருகின்றன

அ. முட்டை ஒட்டுண்ணி – டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் (Trichogramma chilonis)
ஆ. புழு உட்டுண்ணி – அபேன்டிலஸ் பேப்பிலியோனிஸ் (Apanteles papilionis)
இ. கூட்டுப்புழு ஒட்டுண்ணி – டீரோமேலஸ் பியூபேரம் (Pteromalus puparum)
2. ஏக்கருக்கு 200 கிராம் பெசில்லஸ் துரின்ஸியென்சிஸ் (Bacillus thuringiensis) எனும் பேக்டீரியா நோய்கிருமியைத் தெளிக்கலாம்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports