தென்னையில் நோய்த் தடுப்பு


வழிமுறைகள்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, தற்போது பருவநிலை மாற்றங்கள் நிலவுவதால் தென்னை சாகுபடி விவசாயிகள் நோய்த் தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
தஞ்சாவூர் வாடல் நோய்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த நோய் தென்னை மரங்களில் பரவலாகக் காணப்படும். ம் அரம் ஒன்றுக்கு 5 மில்லி காலிக்ஸின் என்ற பூஞ்சானை கொல்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து 4 மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் உள்செலுத்தவேண்டும்.
குருத்து அழுகல் நோய்:
பைட்சோஸான் 5 கிராமுடன் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து குருத்துப் பகுதி முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும். மரத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை 250 கிராம் போராக்ஸ் நுண்ணூட்டத்தை 5 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்சினால் ஒல்லிக்காய் ஏற்படுவதை நிவர்த்தி செய்யலாம்.
நுனி சிறுத்தல் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் உள்ள இரண்டு கிராம் பெர்ரஸ் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் வேர் மூலம் செலுத்தினால் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
வளர்ந்த தென்னை மரத்திற்கு துத்தநாக சல்பேட் 200 கிராம் போராக்ஸ் 200 கிராம், மாங்கனீஸ் சல்பேட் 100 கிராம், காப்பர் சல்பேட் 50 கிராம் மற்றும் சோடியம் மாலிப்பேட் 10 கிராம் கொண்ட கலவையை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இடுவது நன்மை அளிக்கும். மேலும் விவரங்களுக்கு 04373-260205 என்ற தொலைபேசி எண்ணில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports