பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க செய்திட பொதுவாக மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள்


• வளமான நிலங்களில் இதர பயிர்களுடன் ஊடுபயிராக கலப்புப்பயிராக வரப்பு ஓர பயிராக பயிர் செய்தல் வேண்டும்.
• வறட்சி தாங்கும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
• நிலச் சீர்த்திருத்தம் மற்றும் மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
• அதிக மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்து நன்கு விதைகளை பக்குவப்படுத்தி விதைக்க வேண்டும்.
• மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சான்று பெற்ற விதைகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து வாங்கி பயன்படுத்திட வேண்டும்.
• விதை நேர்த்தி செய்து,விதைக்கும் கருவி கொண்டு விதைக்க வேண்டும்.
• பூ,காய் உதிர்வதை தடுக்க டிஏபி, பிளானோபிக்ஸ் ஆகியவை தெளிக்க வேண்டும்.
• ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
.• தகுந்த பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படல் வேண்டும்.
• உற்பத்தித் திறன் அதிகம் கொண்ட துவரை, உளுந்து,தட்டைப்பயறு ஆகிய பயிர்களை தனிப்பயிராக இறவையில் பயிரிட வேண்டும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports