சித்தரை பட்டத்தில் எள், உளுந்து


சித்தரை பட்டத்தில் எள், உளுந்து பயிரிடலாம்
உளுந்து பயிரிட ஏற்ற தருணம். ஆடுதுறை 5 உளுந்து ரகத்தை பயிரிடலாம். உளுந்து தண்ணீர் காட்ட வேண்டுமே தவிரக் கட்டக் கூடாது. தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரெயின்கண், தெளிப்பு நீர் பாசன கருவி போன்றவற்றை வழங்கி வருகிறது.

இந்தக் கருவிகளை நிலத்தில் இரு இடத்தில் பொருத்தினால் அவைகள் சுற்றி, சுற்றி வந்து தண்ணீரை நிலத்தில் பீய்ச்சி அடிக்கும். இதனால் பயிருக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.
மேலும் 50 சதவீதம் மானியத்தில் நுண்ணூட்டச் சத்துகளும், இனக் கவர்ச்சி பொறிகளையும் வேளாண் துறை வழங்கி வருகிறது. இதுதவிர தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதைக்கு கிலோவுக்கு ரூ. 12 மானியம் வழங்கப்படுகிறது.
உளுந்துக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருத்துகளை அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தில்ன் ஆலோசனைப்படி செய்வது நல்லது. இப்போது உளுந்து நல்ல விலைக்கு போவதால் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்வதையே விரும்பி மேற்கொள்கின்றனர். மேலும் சாகுபடி செலவு, ஆட்கள் கூலி குறைவே இதற்கு காரணம்.
எள்:
இப்போது உளுந்துக்கு அடுத்தப்படியாக எள் பயிரிடப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் எள் பயிரிட்டால் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமையும். எள்ளுக்கு தண்ணீர் அதிகாளவு பிடிக்காது. களையும் ஒரு முறை எடுத்தால் போதும். அதுவும் களைக்கொல்லி போட்டுவிட்டால் களை எடுக்க வேண்டியதில்லை.
எள் பயிர் 2 இலைவிட்டசில நாட்களில் நுனியை கிள்ளி விட்டால் அதிக கிளை வெடித்து காய்கள் அதிகளவில் பிடிக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும். மேலும் எள் செடி நெருக்கமாக இருந்தால் அவற்றை களைத்து விட வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.
பயிரிட்ட 90 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அறுவடை செய்த பயிர்களை போராக குவித்து ஒர் இடத்தில் வைக்க வேண்டும்.அவைகள் நன்கு புழுங்கிய பின்னர் வெயிலில் உலர்த்தினால் விதைகள் கொட்டும். பின்னர் செடிகளை ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் வைக்க வேண்டும். மீண்டும் வெயிலில் உலர்த்த வேண்டும். இது போன்று மொத்தம் 3 முறை செய்த பிறகு செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த பயிருக்கு சாகுபடி செலவு குறைவு முறையாக சாகுபடி செய்தால் அதிகம் லாபம் தரக்கூடிய பயிர் எள். ‘இளச்சவனை எள்ளு தூக்கிவிடும்’ என்று விவசாயிகளிடத்தில் ஒரு பழமொழியும் உண்டு. உழவுக் கூலி மற்றும் அறுவடைக் கூலி, ஒரே ஒரு களை எடுத்தல் கூலி என்று ஏக்கருக்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் ரூபாய் 20 ஆயிரம் வரை லாபம் பெறலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports