பயறு சாகுபடியில் களை நிர்வாகம் (விதைப்பிற்கு பின்)


ஒரு எக்டருக்கு 1.5 லிட்டர் புளுகுளோரலின் (பாசலின்) அல்லது 2லிட்டர் பெண்டிமெத்தாலின் (ஸ்டாம்ப்) களைக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மிலி வீதம் கலந்து விதைத்து 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லியை 50 கிலோ மணலுடன் கலந்தும் தூவலாம்.

• களைக்கொல்லியை கைத்தெளிப்பானால் தெளிக்க அகலவாய் தெளிப்பான் முனை நாசிலை பயன்படுத்த வேண்டும்.
• களைக்கொல்லியை வயலில் ஈரம் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.
• களைக்கொல்லியை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது.
• தெளித்த மூன்று நாட்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
• நிலத்தில் களைக்கொல்லி தெளிக்கும்போது அல்லது தூவும் போது பின்னோக்கி நடந்து அதனை செய்ய வேண்டும்.
• களைக்கொல்லி அடிப்பதன் மூலம் களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports