தொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு ஊர் கொம்புபள்ளம். இந்த ஊரில், தமிழக உழவர் தொழில் நுட்ப கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் திரு சுந்தர ராமன் அவர்கள்.
இயற்கை விவசாயம் என்பதை முழு மூச்சாக கொண்டு இயங்கி வரும் இந்த கழகத்திற்கு தமிழகம் மட்டும் அல்ல, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக போன்ற இடங்களில் இருந்து விவசாயிகள் படை எடுத்து வந்து பயிற்சி எடுத்து செல்கிறார்கள்.
சுந்தர் ராமனும் மற்ற விவசாயிகளை போன்று, 20 வருடங்கள் முன்னால் ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியே இருந்து இருக்கிறார். இந்தியாவில் எங்கே ஒரு புது பூச்சி மருந்து வந்தாலும் உடனே பயன் படுத்தி இருக்கிறார். ஆனல் படி படியாக நிலத்தின் வளம் குறைந்து போனது. 1991 வருடம் முதல், ரசாயன உரங்களை போடுவதில்லை என்று முடிவு எடுத்தார்.
இயற்கை விவசாயத்தில் முன்பு எவ்வளவு மகசூல் கிடைத்ததோ அதே அளவு கிடைக்கிறது என்கிறார் அவர். அதற்கு அவர் சில வழிமுறைகளை பயன் படுத்துகிறார். தொல்லுயிரி கரைசல் அதில் ஒன்று.
தொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி?
  • 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்று எடுத்து கொண்டு, அதில் அன்று கிடைத்த பசுஞ்சாணம் 5 கிலோ, தூள் செய்யப்பட்ட வெல்லம் முக்கால கிலோ, கடுக்காய் 25 கிராம் எடுத்து அந்த பிளாஸ்டிக் கானில் போட்டு கலக்க வேண்டும்.
  • அதிமதுரம் 2.5 கிராம் எடுத்து, அரை லிட்டர் நீரில் கொதிக்க வெய்து சேர்க்க வேண்டும்.
  • பின்பு கேன் முழுவதும் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.
  • இரண்டு நாள் கழித்து பார்த்தல், கேன் விரிந்து உப்பி இருக்கும்.
  • அப்போது, மூடியை லேசாக திறந்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே இருந்து வரும் methane  வாயுவால் கேன் வெடித்து விடும்.
  • பத்து நாட்கள் கழித்து தொல்லுயிரி கரைசல் தயார்  ஆகி விடும். இந்த கரைசலை வேறொரு கானில் மாற்ற வேண்டும்.
  • ஒரு ஏகர் பாசன நீரோடு இந்த கரைசலை 200 லிட்டர் கலந்து விடலாம்.
  • பத்து லிட்டர் நீரில் ஒரு லிட்டர் கரைசலை கலந்து தெளிப்பான் மூலன் தெளிக்கலாம். இவ்வாறு பயிர் மேல் தெளித்தல், செடிகள் இலைகள் பெரிதாகி விளைச்சல் அதிகம் ஆகும். பூச்சிகளை விரட்டவும் செய்யும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports