பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு


 • வீடுகளில் பருப்பு வகைகளை சேமிக்கும் போது தாங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, சேமிப்பு கலனில் அடிப்பகுதியில் மிளகாய் வற்றலுடன் வேப்பிலையை போட்டு வைத்தால் போதும்.
 • தட்டைப்பயிறு சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவனியை கட்டுப்படுத்த, மஞ்சள் தூள், சாம்பல் இவற்றை 1 கிலோ எடுத்து 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
 • உளுந்து சாம்பல் நோய், பச்சை இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 25 கிலோ வேப்பங்கொட்டை பருப்பை இடித்து 500 லிட்டர் தண்ணீரில் இட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்து தெளிக்கலாம்
 • பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சிப் போன்ற சாறு உறிஞ்சும்  பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 2 கிலோ மஞ்சள் தூள், 8 கிலோ சாம்பல்  இவற்றை 200 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
 • அனைத்துப் பயிர்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைக் கலந்து தெளிக்கலாம்.
 • அனைத்துப் பயிற்சிகளிலும், போரான் குறைப்பாட்டை சரிசெய்ய, எருக்கலை இலைச்சாற்றை தெளிக்கலாம்.
 • பயறு வகைப்பயிர்கள் சேமிக்கும் போது, செம்மண்ணையோ, வேப்ப எண்ணெயை கலந்து வைத்தால் பூச்சிகளை தூர ஒட்டலாம்.
 • படைப்புழுவைக் குறைக்க பூண்டுசாற்றை தெளிக்கலாம்.
 • பயிறு வகையில், பறவைகளை விரட்ட, ஒரு நீண்ட குச்சியில் பாலித்தீன் பையைக் கட்டி வைக்கலாம
 • உளுந்துப் பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை பருப்பு சாறு, வேப்பிலை, சாணிக்கலவை, கோமியம் கலந்து தெளிக்கலாம்.
 • விதைகளை மண்கலத்தில் சேமித்தால், முளைப்புத்திறன் 6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
 • பயறுவகைகளை அரப்பு இலைத்தூளை பூச்சுப்பொருட்களாக பயன்படுத்தினால் எநும்பு, பறவை தொல்லை  இராது.
 • உளுந்து, பாசிப்பயிறு வகைகளில் ஏற்படும் பூச்சித் தொல்லைக்கு நொக்சி, ஆடாதொடா, ஊமத்தை இலைச்சாற்றைத் தெளிக்கலாம்.
 • பயறுவகைகளை சேதப்படுத்தும்  பயிறு  வண்டினை தடுக்க அமாவாசை  அன்று எடுத்து காயவைக்கவேண்டும்.
 • பயறு சேமிப்பின்போது ஏற்படும் பூச்சி, நோய்களுக்கு சேமிக்கும் மண் கலன்களில், காய்ந்த வேப்பிலை அல்லது மிளகாய் வற்றலை  சேர்க்க வேண்டும்.
 • பயறு வகைகளில் பயிறு வண்டைக் கட்டுப்படுத்த பச்சை இளம் ஆகாய தாமரை இலையை 5 மணி நேரம் ஊறவைத்து 10 சதவீதம் கரைசலை அடிக்கலாம்.
 • துவரையைச் சேமிக்கும் முன்பாக  செம்மண் சாந்தில் கலந்து காய வைத்து  சேமிக்கலாம்.
 • பயறுவகைகளில் சேமிப்பு கிடங்கு  பூச்சிகளைத் தடுக்க, நொச்சி, வேப்பிலையை சேர்த்து சேமிக்கலாம்.
 • அடி உரமாக வேப்பம் புண்ணாக்கை வயலில் இட்டால் பூச்சி, பூஞ்சாண நோய்களை் தடுப்பதோடு, நூற்புழு தாக்குதலும் தடுக்கலாம்.
 • துளசி, வேப்பிலை, ஆடாதொடா போன்றவற்றின் காய்ந்த இலைகளை பயறுவகைப் பயிர் விதையுடன் கலந்து வைக்கும்போது, பூச்சிகள் சேதாரத்தை உருவாக்காது.
 • துவரைப் பயிரை உடைக்க, அதன் மீது நல்லெண்ணெய் தடவி, வெயிலில் காய் வைத்தால் சுலபமாக உடைப்படும்.
 • பயறுவகைகளை செம்மண் சாந்தில் கலந்து காயவைத்து சேமித்தால் பயறு வண்டுகள் முட்டையிடுவது தடுக்கப்படும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports