பயிரைத் தாக்கும் நோய்கள் : மக்கா சோளம்


 அடிச்சாம்பல் நோய் : பெரனோஸ்கிரிரோஸ் போரா சொர்கி
 • இந்நோய் குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
 • அறிகுறிகள் : இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி வெளிர் நிறத்திலும், வளர்ச்சி குறைந்தும், இலையின் மேல் வெள்ளை - வரிக்கோடுகள்  கொண்டும், குறைந்து விதை அமைப்பு கொண்டும் காணப்படும்.
 • எதிர்ப்புசக்தி கொண்ட செடி மட்டும் நோய்க்கான அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. ஆனால் செடியின் மகசூலில் பாதிப்பு ஏற்படுத்தவதில்லை.

கட்டுப்பாடு
 • அசைல்அலனின் பூசணக்கொல்லியான மெட்டாலக்சில் 6 கிராம் கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும்.
 • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி எறியவும்.
 • விதைகளை ஆப்ரான் 35 டபிள்யூ பி 2.5 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 • நோய் எதிர்ப்பு இரகங்கள் _ கோ எச்(எம்) 5, இன்டிமிட், 345, இஹெச், 43861, கேஹெச்-526, ஏஹச் - 36.
 • மெட்டாலக்சில் 1 கிராம் / லிட்டர் மெட்டாலக்சில் + மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

2. பிரெளன் வரிக்கோடுகளைக் கொண்ட அடிச்சாம்பல் நோய் : ஸ்கிளிரோப்தோரா ரேசியே இரகம் : சியே
 • அடியில் உள்ள இலையில் இலைக்கருகல் ஆரம்பித்து. இலைகள் வெளிர்நிறமாக மாறி வரிக்கோடுகளை கொண்டு மாறி இருக்கும்
 • பின்னர் இந்த வரிக்ககோடுகள் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறுகின்றன. பின்னர் தோன்றும் கருகல் அறிகுறி வரிகளாகவும், திட்டுதிட்டாகவும் மாறுகின்றன.
 • செடி பூப்பதற்கு முன் பாதிக்கப்பட்டால் இறந்துவிடக்கூட வாய்ப்பு உண்டு மற்றும் விதைகள் உற்பத்தியாவது குறைகிறது.
 • வெள்ளைப் பூசண வித்துக்கள் இலையின் இரண்டு பாகத்திலும் தோன்றுகின்றன.
 • இதில் பூக்கும் பாகமும், காய்க்கும் பாகமும் மாறுவதில்லை மற்றும் இலைகள் உதிர்கின்றன.
கட்டுப்பாடு
 • அசைல்அலனின் பூசணக் கொல்லியான, மெட்டாலிக்சில் (6 கிராம்) மற்றும் இலைகள் உதிர்வதில்லை.
 • நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள இரகங்கள். பிரபாத், கோஹினூர், ஐசிஐ-703, பிஎசி – 9401, பிஎம்இசட்- 2, சீபெக் - 2331.

3. சார்கோல் தண்டு முதல் நோய் - மேக்ரோபோமினா பேசியோலினா
இந்நோயை ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பரவுயுள்ளது.

அறிகுறிகள்
 • செடி பூத்து 1-2 வாரங்கள் கழித்து இந்நோய் தோன்றுகிறது. வெளி இடைக்கணுவின் கீழ்பகுதி வெளில் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
 • இடைக்கணுவின் முளைக்கும் பகுதி மிகவும் மோசமாக அழுகி இருக்கும்.
 • நோய்க்கான காரணி நாற்றாங்கால் பயிரின் வேரினுள் நுழைந்து விடுகிறது. செடி அடையும் போது தண்டின் உள்பகுதி கருப்பு நிறமாக மாறியும் உதிர்ந்தும் காணப்படுகிறது.
 • இவ்வகையான அறிகுறிகள் தண்டின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தை உற்று பார்த்தால் அதில் சிறிய கருப்பு நிறமுடைய நோய்க்கான காரணியை தோற்றுவிக்கும் ஸ்கிளிரோஷியா காணப்படுகிறது.
 • இந்நோய்க்கான காரணி தானியத்தின் மேல்பகுதியை பாதித்து அதை கருப்பாக்குகிறது.
 • மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் குறைவான ஈரப்பதம்
கட்டுப்பாடு
 • பூக்கும் நேரத்தில் குறைவான தண்ணீர் கிடைப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே அதை தவிர்க்கவும்.
 • டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் பொடலாம். (பத்து நாட்களுக்கு முன் கலந்து வைத்து பின்னர் போடலாம்).

4. டர்கிசம் இலைக்கருகல் நோய் : எக்ஸிரோஹிலம் டர்சிகம்

இந்நோய் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், மேகாலாயா, திரிபுரா, அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், உத்திராஞ்சல், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில்  பரவியுள்ளது.
Maize
Maize
அறிகுறிகள்
 • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி மிக சிறிய பொருளாதார சேதாரத்தை ஏற்படுத்தகிறது. இந்நோயின் முந்திய நிலையில் சிறிது நீள் வட்டவடிவ தண்ணீரில், மூழ்கியுள்ள அளவு சிறிய புள்ளிகள் உருவாகும். இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், நீளவடிவமுள்ள புள்ளிகளாகவும், இறந்த செல்களைக் கொண்டும் உள்ளன.
 • இவ்வகையான அறிகுறிகள் முதலில் கீழ்ப்பகுதியிலுள்ள இலைகளிலும் தோன்றி, அவை அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகரிக்கின்றன. இவ்வகையான அறிகுறிகள் செடிகள் காயும் வரை தோன்றுகின்றன.
 • இவ்வகையான புள்ளிகள் பெரியதாகவும், வெளிர்பச்சை, நிறத்திலும் இருக்கும்.
கட்டுப்பாடு
நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான, சால்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான் 109, பயிரிடலாம். மேங்கோசெம்  2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

5. மேய்டிஸ் கருகல் : பைபோலாரிஸ் மேடிஸ்
Maize
Maize
அறிகுறிகள்
 • இளம் புள்ளிகள் சிறியதாகவும், வைரத்தைப் போன்ற வடிவுடையதாக இருக்கும்.
 • இவை பெரியதாகும் போது, நீளமாகவும் இருக்கும். இவ்வகையான இலைப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையில் எரிந்துபோன தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
 • இவ்வகையான புள்ளிகள் வீரிய இரகத்திற்கும், மற்ற இரகத்திற்கும் மாறுபடுகின்றன.
கட்டுப்பாடு
 • மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
 • நோய் எதிர்ப்புக் கொண்ட இரகங்களான டெக்கான், விஎல்42, பிரபாத், கேஹச்.5901ஈ பிஆர்ஓ-324, 339, ஐசிஐ - 701, எஃப் - 701, எஃப் - 7012, சார்டஜ், டெக்கான் 109 பயிரிடலாம்.

6. சர்வுலேரியா இலைப்புள்ளி நோய் - கர்வுலேரியா பல்லஸ்சென்ஸ் கர்வுலேரியா லுனேடா
இந்நோய் டெல்லி, பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆந்திர்பிரதேசத்தில் பரவியுள்ளது.
MaizeMaize
அறிகுறிகள்
 • இந்நோய் முதலில் சிறிய வடிவ புள்ளிகளாக தோன்றி பின்னர் பெரியதாக தோன்றுகிறது.
 • இதில் இலைக்கருகல் வட்ட வடிவ நீள்வட்ட வடிமாகவும், தனித்தனியாகவும் அல்லது சேர்ந்தும் காணப்படுகிறது.
 • இலைக்கருகலின் மத்தியப் புள்ளி வெளிர் நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறமாகவும், இதனை சுற்றி அடர்பகுப்பு வரிகளால் சூழப்படுகிறது.
கட்டுப்பாடு
 • திரம் அல்லது கேப்டான் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதைநேர்த்தி செய்யலாம்.
 • இரண்டு முளை கேப்டால் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

7. பழுப்புநிறப்புள்ளி நோய்  - பைசோடெர்மா மேய்டிஸ்
MaizeMaize
 • இந்நோய் ஜம்மு மற்றும் காஷ்மீர், சிக்கிம், மேற்குவங்காளம், பஞ்சாப், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களில் பரவியுள்ளது. அதிக வெப்பநிலையில் இந்நோய் பரவுகிறது.
 • முதலில் இலையின் விளிம்புகளில் இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. பின்னர் சிறிய வெளிர்நிறப் புள்ளிகளாகவும், மற்றும் நோயுள்ள மற்றும் நோயற்ற திசுவின் வரிக்கோடுகள் கொண்டும் காணப்படுகின்றன.
 • இலையில்  மத்திய நரம்பின் பகுதி வட்டவடிவமாகவும் அடர் பழுப்பு நிறத்திலும், மற்ற இடத்தில் வெளிர் நிறமுடைய புள்ளிகளை கொண்டிருக்கும். கணுவும், இடைக்கணுவும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 • மிகவும் தீவிர நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளில், தண்டுப் பகுதியும் சேர்த்து அழுகிவிடும் வாய்ப்புண்டு.
கட்டுப்பயிர்
 • சற்று முன்பருவத்தில் பயிரிட்டால் இந்நொய் தாக்குவதிலிருந்து தப்பிக்கலாம்.
 • வயலைச் சுற்றிலும் கரும்பு வகையைச் சார்ந்த பயிரை பயிர் செய்வதைத் தவிர்க்கவும்.
 • அசைல் அலனின் பூஞ்சாணக் கொல்லியான மெட்டாலகஸில் பயன்படுத்தலாம்.

8. பித்தியம் தண்டழுகல் - பித்தியம் அபெனிடெர்மேட்டம்
இந்நோய், சிக்கிம், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகாகர் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
அறிகுறிகள்
 • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் அடி இடைக்கணு மிகவும் மென்மையாகவும். அடர் பழுப்பு நிறத்திலும் தண்ணீரில் மூழ்கினமாதிரி புள்ளிகள் தோன்றி, செடியை வளரவிடாமல் செய்கிறது.
 • சேதப்படுத்தப்பட்ட இடைக்கணு திருகிய தோற்றத்துடனும், செடியின் எல்லாவிதமான தண்டின் உள்பகுதி சேதம் ஆகும் வரை செடி உயிருடனும் இருக்கும்.
 • இதனை ஊடகத்தில் பிரிக்கும் போது பித்தியத்தையும், எர்வீனியா வித்தியாசப்படுத்துவது அவசியம்.
கட்டுப்பாடு
 • வடஇந்தியாவில் ஜ¤லை 10 முதல் 20க்குள் நடவு மேற்கொள்ளவேண்டும்.
 • ஒரு எக்டருக்கு செடியின் எண்ணிக்கை 50,000 இருக்குமாறும் காத்தல்வேண்டும்.
 • வயலில் தண்ணீர் நன்கு வடியுமாறு காத்தல் வேண்டும்.
 • முந்திய  பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
 • கேப்டான் என்ற மருந்தை 1 கிராம் / 100 லிட்டர் என்ற அளவில் அடிக்கணுவில் மண்ணில் தெளிக்கவேண்டும்.
 • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான - கங்கா, சேபெட் 2 பயிரிடலாம்.

9. பாக்டீரியா தண்டழுகல் நோய் -  எர்வினியா கிரைசேன்திமி பிவி சியே
கட்டுப்பாடு
 • பிளீச்சிங் பவுடரில் 33 சதவிகிதம் குளோரின் உள்ளது, இதை 10 கிலோ / எக்டர் என்ற அளவில் மண்ணில் தெளிக்கவும். இதைப் பூப்பதற்கு முன் தெளிக்கவும்.
 • செடிகளை பார்களில் நடவும். வயலில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும். நன்றாக தண்ணீர் வடியவிடவேண்டும்.
 • இந்நோய் ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
 • தரைப்பகுதியில் தண்டின் பகுதி அழுகியும், பழுப்பு நிறமாக மாறியும் எளிதில் உடையக்கூடியதாகவும் காணப்படும்.
 • அழுகியுள்ள திசுக்களின் பகுதி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
 • பாதிக்கப்பட்ட செடி அடர்ந்த நிறமுடையதாகவும் தண்டின் கீழ் பகுதியில் கருகியும் காணப்படும். ஆண்டு பூத்து முடிந்ததும் செடிகள் விரைவாக இறந்துவிடும்.
 • இந்த பாக்டீரியா சேதமடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

10. ப்யூசேரியம் தண்டழுகல்  - ப்யூசேரியம் மொனிலிபார்மி
 • இந்நோய் வறண்ட பகுதிகளிலும், வெப்பமான பகுதியிலும் காணப்படுகிறது.
அறிகுறிகள்
 • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி வாடியும், இலைகள் இளம்பச்சை முதல் வெளிர் பச்சை நிறமுடையதாகவும், கீழ்த்தண்டுப்பகுதி வெளிர் நிறமுடையதாகவும் காணப்படுகிறது.
 • தண்டின் உள்பகுதியில் உள்ள திசு சேதமடைகிறது. வாஸ்குலார் திசுவை தவிர மற்ற தண்டின் உள்பகுதியில் சிவப்பு நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
 • இந்நோயை உண்டாக்கக்கூடிய பூசணம் வேரின் வழியாக நுழைந்து தண்டின் கீழ்பகுதியில் வளர்கிறது.
 • பூத்தபின் நோய் தாக்கினால், உமியின் மேல்புறம் நிறமற்றதாகவும், வெளிர் நிற தோற்றத்தை உடையதாகவும் காணப்படுகிறது.
கட்டுப்பாடு
 • பொட்டாசியம் வகையினாலான உரத்தை பயன்படுத்துவதால் சேதாரம் குறைகிறது.
 • பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறும் விதைகளை பயிரிடக்கூடாது.
 • பயிர் சுழற்சி செய்யவேண்டும்.
 • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான - இரன்ஜித் மற்றும் கங்கா 5 பயிரிடலாம்.
ஒரு முறை கலப்பு செய்யப்பட்ட இரகங்களான -  சிம் 103 x சிஎம் 104, சிஎம் 400 x சிம் 300 ஐ பயிரிடலாம்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports