கொள்ளு


  • இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இதில் இரும்பு, கால்சியம் (சுண்ணம்), மாலிப்டினம், பலபீனால்கள் உள்ளடக்கியுள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் ஆக்சிசனை தடுத்து நமது உடற்கலங்களுக்கு/உயிரணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இவை அத்தீங்கு ஆக்சிசனைத் தடுக்கும் முக்கியக் காரணிகளை அகத்தேக் கொண்டுள்ளதாக இயம்பப்படுகிறது.
  • இதற்கு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் அறியப்படுகிறது. தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
  • இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
  • கொள்ளை வேகவைத்து எடுத்த நீரை குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுவருகிறது.
  • பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • முளைக் கட்டியக் கொள்ளு/காணத்தில் உயிர்ச்சத்துப் பொருட்களாகிய உயிர்ச்சத்து ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுகிறது. இதனுள் உடலுக்குத் தேவையானத் தனிமமாகிய இரும்பு மற்றும் பொட்டசியம் நிறைந்திருக்கின்றன எனவும் கூறப்படுகிறது [1].
  • இது தமிழர் உணவுகளில் அவியல், துவையல், இரசம், பொறியலாக இடம்பிடிக்கின்றன.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports