தசகாவ்யா தயாரிப்பு முறை


தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு.
இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்கும். இதில் மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், மாட்டுப்பால், தயிர் மற்றும் நெய், இவைகள் உள்ளன.
இதனை பக்குவமாகக் கலந்து செடிகளுக்கு இட்டால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா), எருக்கம் (கேலோடிராபிஸ்), கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா), நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ), உமதை (டட்டுரா மிட்டல்), காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்), அடத்தோடா (அடத்தோடா வேசிகா) மற்றும் புங்கம் (பொங்கேமியா பின்னட்டா),
இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாறு இயக்கியாகப் பயன்படுகின்றது.
 • தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் – 1 லிட்டர் மாட்டு நீரில்) தழைகளை முக்கி 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.
 • வடிகட்டிய அனைத்து வகையான தாவர சாரை ஒவ்வொரு 5 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலில் 1 லிட்டர் என்ற அளவில் சேர்க்கவும்.
 • இந்தக் கரைசலை 25 நாட்களுக்கு வைத்து நன்றாகக் குலுக்கவும்.
 • அந்த நேரத்தில் பஞ்சகாவ்யா மற்றும் தாவர வடிசாரை நன்றாகக் கலக்கவும்.
பயன்படுத்தும் முறை
 • தசகாவ்யா கரைசலை வடிகட்டவும்.இல்லையெனில் தெளிப்பானின் நுனியில் அடைப்பு ஏற்படும்.
 • 3% தழை தெளிப்பானாக பரிந்துரைக்கப்ட்டது.
 • செடியை நடவு செய்வதற்கு முன் 3% தசகாவ்யா கரைசலில் விதைகள் அல்லது நாற்றுகளின் வேர்களை 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் விதை வளர்ச்சி மற்றும் வேர் உருவாகுதல் அதிகமாக இருக்கும்.
 • அனைத்து காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்கள் வளரும் போது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
 • செடியின் வளர்ச்சி, மகசூல் மற்றும் பயிரின் தரம் அதிகமாகும்.
 • அசுவுணி, செடிப்பேன், சிலந்தி மற்றும் இதர உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
 • இலைப்புள்ளிகள், இலைக்க கருகல், சாம்பல் நோய் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த உதவும்.
 • குன்றுகளில் இருக்கும் பயிர்களில் உள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்காக
தசகாவ்யாவின் பயன்கள்
ரோஜா: 3% தசகாவ்யாவை ரோஜா செடியின் மேல் தெளித்தால் செடிப்பேன் மற்றும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
ஜெர்பெரா: ஜெர்பெரா சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த தசகாவ்யாவை தழைத் தெளிப்பாக தெளிக்கவும்.
தேயிலை: 15 நாட்கள் இடைவெளியில் 3% தசகாவ்யாவை தெளித்தால் கருகல் நோயிடம் இருந்து கட்டுப்படுத்தலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports