இயற்கை உரமனான அவுரி செடி


விவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை உரம் தாவரமான அவுரி செடி வளர்ப்பு சாகுபடி அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்டவிவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளான மண் வளம் பாதுகாக்க இயற்கை உர தாவரமான அவுரி செடி வகை நிலங்களில் தெளிக்கப்பட்டு, அதனை நன்றாக வளர்ந்த பின், அடி உரமாக மண்ணுடன் உழவு செய்யப்படுகின்றது.

  • இதன்மூலம் நெல் சாகுபடி பயிருக்கு ரசாயனம் உரமான யூரியா தேவை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதுடன் இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது.
  • இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது.
  • மேலும், இந்த இயற்கை விவசாயம் மூலம் நெல் மகசூல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் “கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான விளைநிலங்களில் அவுரி செடி வளர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என விவசாயிகள் தெரிவித்தனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports