பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7


தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரகம் ஜூன், ஜூலை சாகுபடிக்கு ஏற்ற இரகம், சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 978 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. பயிரின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உள்ளது. ஒரு செடியில் 18 முதல் 25 காய்களும் ஒரு காயில் 10 முதல் 13 மணிகள் உள்ளது. காய்கள் செடியின் மேற்பரப்பில் அமைந்துள்ளதால் வயல் முழுவதும் காய்கள் நிறைந்து காணப்படுகிறது. மணிகள் பளபளப்பாக இளம் பச்சை நிறத்தில் உள்ளது. 1000 மணிகளின் எடை 38 கிராம் உள்ளது. ஆடுதுறை 3 இரகத்தில் ஒரு செடிக்கு 15 முதல் 20 காய்களும், ஒரு காயில் 8 முதல் 10 மணிகள் மட்டுமே இருக்கும். 1000 மணிகளின் எடை 25கிராம் மட்டுமே இருக்கும். மற்ற இரகங்களை காட்டிலும் கோ-7 பச்சைப்பயறு ரகம் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளது. இந்த இரகம் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசு மற்றும் இறவையில் ஆடுதுறை 3 இரகத்திற்கு மாற்றாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports