இயற்கை உரமான ஃயூமிக் அமிலம்


விவசாயிகள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கமுடியும் என்று வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் சரியான அளவில் பயன்படுத்தும் போது மண் வளம் காக்கப்படுவதுடன் விளைச்சல் அதிகரிக்கிறது.

 • ஃயூமிக் அமிலம் (Humic acid) என்ற இயற்கை மூலப்பொருளைப் பயிர்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
 • ஃயூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடிநீர், புதைப்பொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவையாகும்.
 • ஃயூமிக் அமிலத்தை ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அமிலத்தை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பான்கள் மூலம் மண்ணில் தெளிக்காலம்.
 • அதிகாலை அல்லது மாலை நேரங்களில் ஒரு ஏக்கருக்கு 2லிட்டர் அமிலத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான்கள் உதவியுடன் பயிரின் மேல் தெளிக்கவேண்டும்.
 • மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஃயூமிக் அமிலம் உணவாகின்றது.
 • நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது. இவை மண்ணில் அங்க பொருடகளை தரும் ஃயூமஸ் நிலையை அதிகரிக்கின்ன.
 • இந்த ஃயூமஸ் இயற்கையாகவே மண்ணில் ஃயூமிக் அமிலத்தை உருவாக்கி பயனளிக்கிறது. ஃயூமிக் அமிலத்தை பயன்படுத்தினால் பயிர்களின் உரத்தேவையை குறைக்கும், அதே சமயம் விளைச்சலை அதிகரிக்கும்.
ஃயூமஸ் (Humus) பயன்கள்
 • நுண்ணுயிரிகள் மண்ணில் வளர உதவுகின்றது.
 • பயிர்களின் புரதச்சத்தை அதிகரிக்கிறது.
 • விதைகளின் வீரியம் மற்றும் முளைப்பு திறன் அதிகரிக்கின்றது.
 • பயிர்களை சுகாதாரமாக வளரச்செய்கிறது. பயிர்களின் வறட்சியை தாங்கிக்கொள்ள உதவுகிறது.
 • வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
 • மண்ணின் வேதியல்,உயிரியல் பண்புகளை மாற்றுகின்றது.
 • மண்ணின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்கின்றது.
 • பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணுயிர் சத்தினையும் அதிகரிக்கின்றது. ஃயூமிக் அமிலம் அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது.
இத்தகைய இயற்கை உரங்களைப் பயிர் வளர்ச்சிக்கு பயன்படத்தும் போது ரசாயண உரச்செலவை குறைப்பதுடன் சுற்றுப்புறச் சூழலையும் காக்கமுடியம்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports