திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சாணார்பட்டியில் பருத்தி சாகுபடி, கடந்த ஆண்டை விட பாதியாக குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்த நிலையில், உரிய விலையும் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இப்பகுகளில் மா, புளி, தென்னைக்கு அடுத்து, அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. செந்துறை, பிள்ளையார்நத்தம், சிறுகுடி, கோட்டையூர், சமுத்திரப்பட்டி, குரும்பப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டது.சில ஆண்டுகளாக எம்.சி.யு., 5, எல்.ஆர்.எ., ரகங்களை சாகுபடி செய்து, கிலோவுக்கு 60 ரூபாய் வரை விற்று, பயன் அடைந்தனர்.
கடந்த ஜூனில் 45 ரூபாயாக சரிந்து, தற்போது 28 ரூபாய்க்கு விலை போகிறது. கடந்த ஆண்டை விட சாகுபடி பரப்பு பாதியாக குறைந்துள்ள நிலையில், உரிய விலையும் கிடைக்கவில்லை. வியாபாரிகள் சிலர் "சிண்டிகேட்' அமைத்து கொள்முதல் விலையை குறைப்பதாக, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்."உழவு செய்தவன் கணக்கு பார்த்தால் உலக்கு நெல் கூட மிஞ்சாது,' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆடிக்காற்றில் பறக்கும் பருத்தியை போல, தங்கள் எதிர்காலமும் கரைந்து விடுமோ? என்ற அச்சத்தில் பரிதவிக்கின்றனர். "இலவு காத்த கிளியாக, நமக்கும் காலம் வரும்,' என்ற ஏக்கம் விவசாயிகள் மனதில் இழையோடுகிறது. பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கவும், நேரடி கொள்முதல் செய்யவும் அரசு முன் வரவேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Agriculture,Farming Machineries,Agriculture Product Price, Agriculture india, Agriculture Business
Agriculture,Farming Machineries,Agriculture Product Price, Agriculture india, Agriculture Business