தொடரும் வெங்காய விலை சரிவு... ஏமாற்றத்தி விவசாயிகள்

       வெங்காய விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வட்டார பகுதிகளில் கடந்த வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இரு வாரங்களுக்கு முன் ஒரு கிலோ 16 ரூபாய் வரை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது; தற்போது, 13 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.விலை உயர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில், பல விவசாயிகள் வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அறுவடை சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், விலை தொடர்ந்து சரிந்து வருவது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; விலை சரிவால் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.


    விவசாயிகள் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு அரசு அனுமதி கொடுக்காததாலும், உள்நாட்டு விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் விலை சரிந்து வருகிறது. விலை சரிவு ஏற்படும்போது, விவசாயிகளை காப்பாற்ற, ஏற்றுமதிக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளது. பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க வெங்காயம் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கினால், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது; பற்றாக்குறையும் வராது,' என்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports