மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை


மண்புழு உரம் தயாரிக்கும் முறையில் புதிய யுத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்புதிய முறையில் சிமென்ட் தொட்டிகளுக்கு பதிலாக “வெர்மி பேக்’ (மண்புழு உரப்பை) தொட்டியாக பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ‘எபிஜெஸ்’ புழுக்களின் உதவியுடன் மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
  • மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச்சருகுகள், விலங்கு கழிவுகள் மற்றும் வேளாண் சார்ந்த கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
  • மண்புழு உரத்தில் சுமார் 15 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 0.8 சதவீதம் சாம்பல் சத்தும், 10 முதல் 12 சதவீதம் வரை கரிமப் பொருள்களும் உள்ளன.
  • ஒரு ஹெக்டேருக்கு 5 டன் மண்புழு உரம் இட வேண்டும். இதில் 75 கிலோ தழைச்சத்தும், 25 கிலோ மணிச்சத்தும், 45 கிலோ சாம்பல் சத்தும் இருக்கும்.
  • இவை சுமார் 160 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 60 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்துக்கு இணையானது.
  • மண்புழு உரத் தொழில்நுட்பத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பண்ணைகளிலேயே தயாரிக்கலாம்.
  • உர உற்பத்திக்கு தனியாக தொட்டிகள் (செங்கல், சிமெண்ட் பயன்படுத்தி) அமைக்கப்படுவதற்கு பதிலாக பெரிய அளவிலான மண்புழு உரப்பைகளை தொட்டிகளாக மாற்றியும் மண்புழு உரம் உற்பத்தி செய்யலாம்.
  • இந்த முறையில் தொட்டிகள் அமைப்பதற்கான செலவு சற்று குறையும்.கையாளுவது எளிதானது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports