மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்


1. மிளகாய் பேன் : சிர்ட்டோதிரிப்ஸ் டார்சாலிஸ் 
சேதத்தின் அறிகுறிகள் :
 • பூச்சி தாக்கப்பட்ட இலைகளில் சுருக்கங்கள் ஏற்படும் இலைகள் மேல்நோக்கி சுருண்டுவிடும்.
 • இலைக்காம்பு நீண்டுவிடும்
 • மொக்குகள் எளிதில் நொறுங்கத்தக்கதாக மாறி கீழ் உதிர்ந்துவிடும்.
 • பூச்சி தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றுவதோடு, â மற்றும் காய்கள் உற்பத்தி தடைபடுகின்றது.

பூச்சியின் விபரம் :
இளம் குஞ்சுகள் :

 • மிகச்சிறிய, நீளமானது எளிதில் உடைகிற உடலினை உடையது.
 • வைக்கோலின் மஞ்சள் நிறம் போன்று இருக்கும்.
பூச்சி : மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது.
கட்டுப்படுத்தும் முறைகள் :
 • ஊடுபயிராக அகத்திய பயிரிடவும் இதன் நிழலானது மிளகாய்பேன் உயிர்தொகையை முறைப்படுத்துகிறது.
 • சோளம் பயிரிட்ட நிலத்தில் மிளகாய் உடனடியாக சாகுபடி செய்யக்கூடாது.
 • மிளகாயில் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது.
 • நாற்றுகளின் மேற்பரப்பில் நீரைத் தெளித்தால் பேன்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
 • நாற்றங்காளில் ஒரு சென்ட்க்கு 200 கிராம் கார்போஃபிäரான் குறுனை இடவேண்டும்.
 • நாற்றுகளின் வேரினை நடவுக்கு முன்பு மானோகுரோட்டோஃபாஸ் 0.05 சதம் கரைசலில் 20 நிமிடம் நனைத்து பிறகு நடவு செய்யவேண்டும்.
 • டைமெத்தோயேட் 2மி.லி / லிட்டர் (அ) மீதைல் டெமட்டரன் 2மி.லி / லிட்டர் தெளிக்கவேண்டும்.
2. பச்சை பேரி அசுவிணி : மைசஸ் பெர்சிக்கே.
சேதத்தின் அறிகுறிகள் :
 • அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் வெளுத்து போய் நோயால் பாதிக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கும்
 • இலையில் சுருக்கங்கள் ஏற்பட்டு சுருண்டு விடும்.
 • அசுவிணி வெளியேற்றும் தேன் துளி ்கரும்புகைப் âசணம் ் ஏற்படுத்துகிறது.
 • அசுவிணி தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகிவிடும்.

இளம் குஞ்சு : முட்டையிலிருந்து வெளிவருபவை பச்சையாகவும் பிறகு மஞ்சள் நிறமாகவும் மாறிவிடும்.
 பூச்சியின் விபரம் :
 • பூச்சி : மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
 • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி அமைத்து இறக்கையுள்ள அசுவிணிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 • அசிஃபேட் 1 கிரம் / லிட்டர் அல்லது மீதைல் டெமட்டான் 2 மி.லி / லிட்டர் அல்லது ஃபாஸோலன் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.

3. புகையிலை வெட்டுப்புழு : ஸ்போடாப்டிரா லிட்ரா
சேதத்தின் அறிகுறிகள் :
 • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும்.
 • இலைகளை சல்லடை போல் அரித்து வெள்ளை நிறத்தில் இலையின் நரம்புகள் மட்டும் இருக்கும்.
 • வளர்ந்த புழுக்கள் இலைகளில் சிறு துளைகளை விட்டு சாப்பிடும்.
 • வளர்ந்த புழுக்களின் தாக்குதல் தீவிரமானால் செடி முழுதையும் கண்டபடி சாப்பிடும்.
பூச்சியின் விபரம் : 

முட்டை : தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும். 

புழு : இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். 

புழு கருமை கலந்த பச்சையாகவும், தலைப்பகுதிக்குச் சற்று பின்புறத்தில் இரண்டு கருப்புப் புள்ளிகளுடனும் உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகனும் இருக்கும்.  

முதிர்பூச்சி : பழுப்பு நிறத்தில் இருக்கும்

முன்இறக்கைகள் : கருப்பு நிறப்பின்னியில் மஞ்சள் நிற குறுக்குக் கோடுகள் இருக்கும்

பின்இறக்கைகள் : வெண்மை நிறத்துடன் ஓரங்களில் பழுப்பு நிற பட்டையுடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :
 • வயலை உழுது மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும்.
 • வயல் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிடவும்.
 • ஹெக்டேருக்கு 15 இனக்கவர்ச்சிப்பொறி வைத்து ஆண் அந்துப் âச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
 • முட்டை குவியல்கள், புழு கூட்டங்களை கையால் சேகரித்து அழிக்கவும்.
 • மாலை நேரங்களில் புரோடீனியா என்.பி.வைரஸ் 250 புழு சமன் அளவு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.
 • ஏக்கருக்கு மானோகுரோட்டோஃபாஸ் 300மி.லி (அ)எண்டோசல்ஃபான் 400 மி.லி தெளிக்க வேண்டும்.

4. கடலைப்புழு : ஹெரிக்கோவெர்பா ஆர்மிஜிரா.
சேதத்தின் அறிகுறிகள் :
 • இளம் புழுக்கள் இளம்தளிர் மற்றும் இலைகளை சாப்பிடும்.
 • வளர்ந்த புழுக்கள் காய்களில் துளையிட்டு சாப்பிடும்.
பூச்சியின் விபரம் : 
முட்டை : பெண் அந்துப்âச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது.
புழு :
 • பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும்
 • வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பலி நிறக் கோடுகளுடன் காணப்படும்.
கூட்டுப்புழு :  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்.
முதிர்பூச்சி : 
 • பெண் அந்துப்âச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும்.
 • ஆண் அந்துப்âச்சி வெளிர் பச்சை நிறத்தில் V - வடிவக் கோடுகள் இருக்கும்.
முன் இறக்கை : பழுப்பு நிற முன் இறக்கையில் V - வடிவக் கோடு இருக்கும்.
பின் இறக்கை : ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.


கட்டுப்படுத்தும் முறைகள் :
 • சேதப்படுத்தப்பட்ட காய்கள் மற்றும் வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 • இனக்கவர்ச்சிப்பொறி “ஹெலியூர்” ஹெக்டேருக்கு 15 வைக்கவும்.
 • முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50000 அளவில் வாரம் ஒரு முறையாக6 முறை வயலில் விடவேண்டும்.
 • ஹெலிக்கோவெற்பா என்.பி.வைரஸ் ஹெக்டேருக்கு 250 புழு சமன் அளவில் மாலை வேலையில் தெளிக்கவும்.
 • எண்டோசல்ஃபான் 2 மி.லி / லிட்டர் (அ) கார்ஃபரில் 2 கிராம் / லிட்டர் (அ) பெசில்லஸ் துருன்ஐியென்சிஸ் 2 கிராம் / லிட்டர் தெளிக்க வேண்டும்.

5. மஞ்சள் முரனைச் சிலந்தி : பாலிஃபேகோடார்சோநீமஸ் லேட்டன். 
சேதத்தின் அறிகுறிகள் :
 • இலைக்காம்புகள் நீண்டுவிடும்
 • இலைகள் கீழ்நோக்கி சுருங்கி சுருண்டுவிடும்
 • செடியின் வளர்ச்சி குன்றிவிடும்

முட்டை : நீள்வட்ட வடிவில் வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
இளம்குஞ்சு : வெண்ணிறத்தில் இருக்கும்.
பூச்சி : சற்று பெரியதாக நீள்வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
முதிர்பூச்சி
கட்டுப்படுத்தும் முறைகள் :
 • டைகோஃபால் @ 2.5 மி.லி / லிட்டர் அல்லது நனையும் கந்தகàள் @ 5 கிராம் / லிட்டர் தெளிக்க வேண்டும்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports