வேளாண் துறை அறிவுரை நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும் முறை

"நிலக்கடலை விதைப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்' என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நிலக்கடலை விதைப்புக்கு, 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் அளவில் கார்பெண்டாசிம் பூசன கொல்லி மருந்தை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் விதை நேர்த்தி செய்ய முடியும். இது, வேர் அழுகல் மற்றும் வாடல் நோய்களிலிருந்து பயிரைக் காக்கும். இதுபோல், ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை அரிசிக் கஞ்சியுடன் கலந்து அந்த கலவையை விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும். அவ்வாறு விதை நேர்த்தி செய்த விதைகளை, 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும். அதனால், பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அதுபோல், ஒரு ஏக்கரில் நடவு செய்ய, 600 முதல், 750 கிலோ வரை மஞ்சள் மலைக் கிழங்கு தேவைப்படும். அதை நடவுக்கு முன் ஒரு லிட்டர் நீரில் கார்பன்டாசிம் ஒரு கிராம் மற்றும் மோனோ குரோட்டோபாஸ், ஏழு மில்லி என்ற அளவில் கலந்த கரைசலில், 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து கிழங்கு அழுகல் நோய் மற்றும் செதில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin

2 கருத்துகள்

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

 1. நிலக்கடலை விதைநேர்த்தி :
  சொத்தை,சுருங்கிய பயிர்களை பொருக்கி சுத்தம் செய்த நிலக்கடலை விதைகளை அரை சத போடசியம் குளோரைட் கரைசலில் ஆறு மணி நேரம் ஊறவைத்து பின் ஒரு ஈர சாக்கை விரித்து அதில் ஊறிய விதைகளை பரப்பி மேலும் ஒரு ஈர சாக்கால் மூடவும்.
  இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஒருமுறை சாக்கை நீக்கி முளை அரும்பிய விதைகளை பொறுக்கி எடுத்து வைக்கவும். இதுபோல் நன்கு அல்லது ஐந்து முறை பொறுக்கி எடுக்கவும். முளை அரும்பாமல் உள்ள விதைகளை ஒதுக்கிவிடவும்.
  இவ்வாரு சேகரித்த விதைக்களுடன் சூடோமோனாஸ் எதிர் உயிர் பாக்டிரியத்தை கிலோவுக்கு பத்து கிராம் என்ற அளவில் சிறிது நீருடன் கலந்து பின் ரைசோபியம் இருபது கிலோவிதைக்கு ஒரு போட்டலாம் (200 கிரம்) வீதம் சிறிது வெல்லக்கரைசல் அல்லது அரிசி கஞ்சியுடன் கலந்து விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாத நிலை வரும்வரை நிழலில் உலர்த்தி உடன் விதைக்க வேண்டும்.
  இருபத்துநான்கு மணி நேரம் வைத்திருக்ககூடது. இரசாயன பூசனக்கொல்லிகள் பயன்படுத்த கூடாது.
  இவ்வாரு செய்வதால் சதுர மீட்டருக்கு முப்பத்து மூன்று செடிகள் என்ற அளவில் பயிர் தொகை பராமரிக்கப்படும். அதன் மூலம் மகசூல் இரட்டிப்பாக வைப்பு உள்ளது.
  மேலும் விதைகள் மேலாக விதைக்கபடவேண்டும். அப்பொழுதுதான் விதைக்கிளைகள் நிலமட்டத்துக்கு இருக்கும் அவ்வாறு இருந்தால்தான் காய்கள் நிறைய பிடிக்கும் மகசூல் ஐம்பது சதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  கலப்பு பூ காணும் பருவத்தில் ஏக்கருக்கு எண்பது முதல் நூறு கிலோ ஜிப்சம் சல்லா துணிபை அல்லது சல்லா சக்குபையில் போட்டு செடிகள் மீது தூவ வேண்டும். தூவிய பின் மண்ணை கிளரிவிடக்கூடது.. இதனால் இறங்கும் விழுது எல்லாம் காயாக வாய்ப்புள்ளது.

  வெங்கடேசன் - தஞ்சாவூர்

  பதிலளிநீக்கு
 2. am not able to read news in tamil. where I download tamil font for reading. Because I saw dots only.

  பதிலளிநீக்கு
புதியது பழையவை

Recent in Sports