நீரில் மூழ்கிய பயிரினை காத்திட


கடந்த சில நாட்களாக பெய்த மழையால் போதிய வடிகால் வசிதியில்லாத இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்குவதை ஓரளவுக்குத்தான் பயிர்கள் தாங்கும். அதற்கு மேல் போனால் அதிகமாக இரும்புச்சத்து வெளியாகி வேரில் படிந்து வேர் அழுகிடவும் பயிருக்குத்தேவையான துத்தநாகம் போன்ற சத்துக்கள் கிடைக்காத நிலையும் அடையும். இதனை தவிர்த்திட இப்போது என்ன செய்யலாம் ?
மழை நின்றவுடன் நீரினை சுத்தமாக வடிகட்டிவிட்டு மாவிற்கு 1 மரக்கால் யூரியா, 1/2 மரக்கால் பொட்டாஷ் என்ற அளவில் உரமிடவேண்டும். இதைவிட பயிருக்கு தேவையான துத்தநாகம் கிடைத்திட 2 கிலோ ஜிங்க்சல்பேட்டுடன், 1 கிலோ யூரியாவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்திடுங்கள். இதனால் பயிர்கள் பச்சைப்பிடித்து தூர்கட்டி வளரும். பின்னர் ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் ஜிப்சம் இடுவதால் பயிர் மூழ்கியிருப்பதால் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்டி நல்ல மகசூல் எடுக்கலாம். எனவே உடன் ஜிங்க்சல்பேட் தெளித்திடவும் பின்னர் ஜிப்சம் இடவும் ஆவண செய்து நீரில் மூழ்கிய பயிரை காத்திடுங்கள்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports