கால்நடை சார்ந்த சந்தேகங்களும்



1.கறவை மாட்டிற்கு மடி வீக்கமாக உள்ளது, இதற்கு என்ன செய்யவேண்டும்? 
மடிவீக்கத்தை கட்டுப்படுத்த சோற்றுக்கற்றாழை – 1 மடல் மஞ்சள் தூள் – 1 கரண்டி சுண்ணாம்பு – 1 கொட்டைப்பாக்கு அளவு -இந்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.  பிறகு மாட்டியின் மடியிலிருந்து 4 காம்பிலிருந்து பாலை கறந்து எடுத்துவிடவேண்டும்.  பிறகு அரைத்து வைத்து மருந்தை மடிப்பாகம், காம்பு பகுதிகளில் மருந்தை தடவி விடவேண்டும்.  இப்படி ஒரு நாளைக்கு 10 முறை தடவிவரவேண்டும்.  குணம் தெரியும்.
2. மாட்டுத்தொழுவத்தை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்? 

மாட்டுதொழுவத்தை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  மாட்டுத்தொழுவம் அருகில் குப்பை, அடைசல் போடக்கூடாது.  அவ்வப்போது டெட்டால், பினாயில் போன்றவற்றை தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
3.கன்று மாட்டிடம் அதிகமாக பால் குடித்துவிட்டால் ஒரே கழிச்சலாக இருக்கிறது.  இதற்கு என்ன செய்வது? 

 இதற்கு சீரகம், கசகசா, வெந்தயம் தலா – 1 ஸ்பூன் பெருங்காயம், மஞ்சள்தூள், மிளகு தலா – 1/2 ஸ்பூன் – மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சட்டியில் போட்டு வறுத்து 1 பல் பூண்டு, 1 பல் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து பனைவெல்லத்தில் தொட்டு, தொட்டு நாக்கின் மேல் தடவி உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.  ஆரம்பத்திலேயே அனைத்து உருண்டைகளையும் உள்ளுக்குள் கொடுத்துவிடவேண்டும்.

4.இரண்டு வார கோழிக்குஞ்சு தீனி உண்ணாமல் குன்றிப்போய் இருக்கிறது.  இதற்கு என்ன செய்வது. 

 கீழாநெல்லி இலை – 1 கைப்பிடி முருங்கைக்கீரை – 1 கைப்பிடி வருகடலை – 1 கைப்பிடி சின்ன சீரகம் – அரை கைப்பிடி -இவை அனைத்து நுணுக்கி தூள் செய்து தீவனத்துடன் கலந்து கோழிக்குஞ்சுகளுக்கு வைக்கவேண்டும்.  இவற்றை உண்ணும் கோழிக்குஞ்சுகள் உடனடியாக குணமடையும்.
5.கன்று போட்டு 3 நாளில் தொப்புள் கொடிவிழுந்துவிட்டது.  ஆனால் அந்த இடத்தில் தற்போது கட்டிமாதிரி வீக்கமாக உள்ளது.  இதற்கு என்ன செய்வது?
 1 பூண்டு, மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அரைத்து 100 மிலி நல்லெண்ணையில் போட்டு கொதிக்கவைத்து இவற்றை ஆறியதும் ஒரு துணியில் வைத்து நழுவாமல் தொப்புள் கொடியில் வைத்து கட்டி வரவும்.  இப்படி செய்தால் ஒரிரு நாளில் குணமாகிவிடும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports