விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை

தோட்டக்கலை பயிர்களுக்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்த மின்வாரியம் தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இயக்கத்தின் மாநில தலைவர் வேலாயுதம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி தோட்டக்கலை பயிர்களான மா, பலா மற்றும் காய்கறிகள் ஆகியவை பணப்பயிர்களாக கருதப்பட்டு இலவச மின்சாரம் வழங்க இயலாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை அமல்படுத்தும் வகையில், திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயி ஒருவருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர். ச

மீபத்தில் தோட்டக்கலை பயிர்களில் தென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை என்ற விதிமுறை பின்பற்றப்பட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண்துறை அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மின்வாரியத்தின் மூலம் தென்னை உட்பட பயிர்களுக்கு இலவச மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports