விவசாயிகளுக்கு விதை சான்று துறை அறிவுரை

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழை போதிய அளவு பெய்துள்ளதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கும், கிணற்று பாசனத்துக்கும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட உள்ளது. சாகுபடியில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, விதை தேர்வில் கவனம் செலுத்த விதை சான்று தெரிவித்துள்ளது.விதை ஆய்வு துறை துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் அறிக்கை: நடப்பு பருவத்தில் சின்ன வெங்காய சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. விதைகளை வாங்கி நாற்றங்கால் விட்டு, நாற்றுகள் பயிர் செய்யப்பட உள்ளன.

விதை வாங்கும்போது பையில் விபர அட்டை, விற்பனை பட்டியல், விற்பனையாளர் கையொப்பத்தை சரிபார்க்க வேண்டும்.விதை சான்று துறை உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் விதைகளை வாங்குவதுடன், மொத்த விதை பாக்கெட்டை உடைத்தோ அல்லது பாக்கெட் இல்லாமல் சில்லரையாகவோ வாங்கக்கூடாது. விபர அட்டையில், வரிசை எண், விதை பெயர், ரகம், முளைப்பு திறன், இனத்தூய்மை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

விவசாயிகள் நல்ல விதைகளை வாங்கி, நடவு செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம். சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விதை சட்டத்துக்கு உட்பட்டு விற்பனை மேற்கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள், விதை வாங்கியதற்கான "இன்வாய்ஸ்' வைத்திருக்க வேண்டும்.இருப்பு பதிவேடு பராமரித்து சில்லறை விற்பனை மேற்கொள்ளக்கூடாது. முளைப்பு திறன் பாதிக்காதவாறு விதையை சேமித்து வைக்க வேண்டும். பூச்சி, நோய் மருந்து மற்றும் களைகொல்லிகளை விதைகளுக்கு அருகில் வைக்கக்கூடாது. விதை இருப்பு பதிவேட்டுடன் ஒத்திருக்க வேண்டும்.

விற்பனை நிலையம் முன் இருப்பு பலகை வைத்து, அன்றாட இருப்பை கட்டாயம் குறித்து வைக்க வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது,
விதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports