வேளாண் கருவிகளை பயன்படுத்தினால் லாபம் அதிகரிக்கும்: நாமக்கல் ஆட்சியர்

வேளாண் கருவிகளை பயன்படுத்தினால், விவசாயத்தில் கிடைக்கும் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும் என நாமக்கல் ஆட்சியர் சோ.மதுமதி கூறினார்.

÷நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.

இக் கூட்டத்தையொட்டி, மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, ஆட்சியர் பேசியது:

÷தற்போது விவசாயக் கூலியாள்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு விவசாயக் கருவிகளை வாங்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன.

÷விவசாயிகள் வேளாண் கருவிகளைப் பயன்படுத்துவதால் முதலீடு பெருமளவு குறைகிறது.

அதே சமயம், விவசாயத்தின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

÷தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பலவகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இக் கருவியை உபயோகப்படுத்தி மக்காச்சோளம், நாட்டுச் சோளம், சூரியகாந்தி, நெல் உள்ளிட்ட பயிர் வகைகளைக் கதிரடிக்கலாம்.

÷குறைந்த வேலையாள்களை கொண்டு இந்த இயந்திரத்தை இயக்க முடியும். அதனால் விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ. 15 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதன் விலை ரூ. 3.10 லட்சம். இதில் ரூ. 1.5 லட்சம் வரை வேளாண் பொறியியல் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது என்றார்.

÷தானியங்கி களை எடுக்கும் கருவி, பவர் டில்லர், பிரஸ் கட்டர், ரோட்டரி டில்லர், விசைத் தெளிப்பான் உள்பட மொத்தம் ரூ. 26.67 லட்சம் மதிப்பிலான 26 வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இக் கருவிகளை வாங்க விவசாயிகளுக்கு ரூ. 8.75 லட்சம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

÷இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்க வேளாண் பொறியியல் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு வாரம் நடைபெற உள்ள பயிற்சியில் எழுத, படிக்கத் தெரிந்த 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டோர் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறையின் நாமக்கல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports