துணை முதல்வர் ஸ்டாலின் - கடலூர், சிதம்பரம் வருகை
தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வருகிறார்.

அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் கடலூரில் திமுக ஒன்றியச் செயலர் ஜெயபாலின் மகன் திருமணத்தில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மாலை சிதம்பரத்தில் நடைபெறும் திமுக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். சிதம்பரத்தில் தங்கி இருக்கும்போது, மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்ட தி.மு.க.வின் செயல்பாடுகள், வரஇருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கூட்டம் முடிந்ததும் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு புதுவை சென்று தங்குகிறார்.விழா கோலம் பூண்டுள்ள சிதம்பரம்:சிதம்பரம் கீழரதவீதியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக துணைமுதல்வரும், திமுக பொருளருமான மு.க.ஸ்டாலின் பேசுகிறார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.


சிதம்பரம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் வரவேற்கிறார்.சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நான்கு வீதிகள், வேணுகோபால்பிள்ளை தெரு, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருபுறமும் திமுக கொடிக்கம்பங்கள், குழல்விளக்குகள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 4 வீதிகளிலும் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் இருபுறமும் இருந்த மணல் அகற்றப்பட்டு சுத்தமாக காட்சியளிக்கிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசவுள்ள பொதுக்கூட்ட மேடையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் புதன்கிழமை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.


துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து, மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஷ் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


ஒரு ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பிக்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 47 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவையல்லாமால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 170 போலீஸôர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports