மஞ்சளுக்கு மாறிய வாழை விவசாயிகள்


மஞ்சள் விலை உயர்வு காரணமாக சென்னம்பட்டி பகுதியில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பவானி தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சென்னம்பட்டி, ஜரத்தல், முரளி, கொமராயனூர், வெள்ளக்காட்டூர், சனிச்சந்தை, திட்டம்பட்டி பகுதிகளில் பருவ மழையை நம்பியும், நிலத்தடி நீரைக் கொண்டும் விவசாயம் நடக்கிறது. சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்தனர். இயற்கை சீற்றம், வறட்சி, நோய் தாக்குதல் என மாறி, மாறி வாழை விவசாயிகள் சோதிக்கப்பட்டனர். நல்ல விளைச்சல் கண்ட ஆண்டுகளில், விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்தித்தினர். சென்றாண்டு முதல் மஞ்சள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மஞ்சள் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

வாழை சாகுபடி விவசாயத்தில் பிரதானமாக ஈடுபட்ட சென்னம்பட்டி பகுதி விவசாயிகள், இந்தாண்டு அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட்டு அறுவடை காலம் வரை 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சராசரி ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். சென்னம்பட்டி பகுதியில் இந்தாண்டு எட்டாம் நம்பர் மற்றும் நாட்டு ரக மஞ்சளை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். பருவமழை ஓரளவு கை கொடுத்துள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது. வரும் மஞ்சள் சீஸனிலும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சென்னம்பட்டி விவசாயிகள் நம்பிக்கையுடன் மஞ்சள் சாகுபடியில் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports