செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்


“தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் ஜோதேடியஸ் தெரிவித்துள்ளார்.
  • நாமக்கல் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், 15 அடி நீளம், ஆறடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள எரு குழிகள் வெட்டி, அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயார் செய்யலாம்.
  • அதற்கு, 750 கிலோ எரு, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ யூரியா, இரண்டு கிலோ சூடோமோனஸ், பத்து பாக்கெட் உயிர் உரம் ஆகியவற்றை கலந்து, எருக்குழியில் இட்டு, மேற்புறம் ஈரமண் கொண்டு பூசுதல் வேண்டும்.
  • இதை, 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
  • இரண்டு மாதங்களுக்குள், நன்கு மக்கிய செறிவூட்டப்பட்ட, தரமான தொழு உரம் தயாராகிவிடும்.
  • அதற்கு, ஒரு எருக்குழி அமைக்க, 50 சதவீதம் மானியமாக, 2,236 ரூபாய் வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள், நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports