தேனி-கோம்பையில் வீட்டு மனைகளாக மாறும் விளைநிலங்கள்

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில், விவசாய நிலங்களை "பிளாட்' டுகளாக மாற்றி விற்பனை செய்வதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற் காக விவசாய நில உரிமையாளர்களிடம் "பவர்' வாங்கி விற்பனை நடக்கிறது. முறையான பேரூராட்சியில் நகரமைப்பு அனுமதி இல்லாமல் விற்பனை செய்யும் இந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்பு மூலம் வளர்ச்சிப்பணிகள் செய்ய முடியாது.

பிளாட் போட்ட இடத்தை சுற்றி தார் ரோடு அமைத்து முறையான அனுமதியுடன் இடம் விற்பனை செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். மக்கள் ஏமாந்து இந்த இடங்களை வாங்குகின்றனர். இந்த விற்பனையை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவதில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் கூறியதாவது; மக்கள் அதிகம் கூடும் பகுதியில் அனுமதியில்லாத பிளாட்டுகளை பொது மக்கள் வாங்க கூடாதென்று அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியில்லாமல் பிளாட் கள் அமைக்கப் பட் டுள்ள இடங்களின் முன்பு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports