ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது ஜப்பான்

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஜப்பான் விதித்துள்ளது. ஈரான் நாட்டில் முதலீடு செய்தல், பணபரிவர்த்தனை போன்ற அனைத்துக்கும் தடை விதிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

ஈரானில் புதிதாக எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் முதலீடு செய்வதையும் ஜப்பான் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் எந்தக் கட்டுப்பாட்டையும் ஜப்பான் விதிக்கவில்லை.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது ஜப்பான் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports