வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியிலிருந்து வேளாண் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை நீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

÷சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியிலிருந்து வெள்ளிக்கிழமை நீர் திறந்து விடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் ஏரியில் உள்ள தண்ணீரை திறந்து விட்டார்.

÷பின்னர் அவர் தெரிவித்தது: ஏரியிலிருந்து 34 வாய்க்கால்களில் மொத்தம் 506 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் குறைந்த அளவு நீர் உள்ளதால் விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

÷இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், கோட்டாட்சியர் அ.ராமராஜூ, விவசாய சங்கத் தலைவர்கள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், கே.விஜயகுமார், ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளர் க.கலியமூர்த்தி, வீராணம் உதவிப் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடுதலாக நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை: கீழணையிலிருந்து வடாவற்றின் மூலம் சென்னை குடிநீருக்கு 100 கனஅடி உள்ளிட்ட 519 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் வடவாற்று பாசனம் போக 150 கனஅடி நீர்தான் வீராணம் ஏரிக்கு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது ஏரியின் நீர்மட்டம் 44.20 அடிதான் உள்ளது மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். இதனால் ஏரி நிரம்பவும் வாய்ப்பில்லை. பாசனத்துக்கு கூடுதலாக நீர் வழங்கவும் வாய்ப்பில்லை.

ஏரிப் பாசனத்தை நம்பி நேரடியாக 44,856 ஏக்கர் நிலங்களும், ஏரியின் மூலம் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் வாலாஜா ஏரி ஆகியவற்றின் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மொத்தம் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வீராணம் ஏரி மூலம் பாசனம் பெறுகின்றன.

÷தற்போதுள்ள இந்த நீர் பாசனத்துக்கு போதாது. எனவே கல்லணையிலிருந்து கொள்ளிடம் பாசனத்துக்காக 1,300 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என விவசாய சங்க கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் கோரியுள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports