மலர் சாகுபடிக்கு மானியம் பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு

"புதுக்கோட்டை மாவட்டத்தில் மலர் செடிகள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க தோட்டக்கலைத்துறை தயாராக உள்ளது' என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஜா, சம்பங்கி, மல்லிகை, வாடாமல்லி போன்ற மலர் செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மண்புழு உரம், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மலர் செடி சாகுபடியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது. மலர் செடி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு இதற்கான முழு தொகையும் மானியமாக வழங்க தோட்டக்கலைத்துறை தயாராக உள்ளது. எனவே, மலர் செடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கான கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல் மற்றும் ரேஷன் கார்டு நகல், இரண்டு ஃபோட்டோ ஆகியவற்றுடன் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports