அரசாணிக்காய் விலை சரிவு : கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

பொள்ளாச்சி சந்தைக்கு அரசாணிக்காய் வரத்து அபரிமிதமாக உள்ளதால், விலையில் சரிவு ஏற்பட் டுள்ளது. இதனால், ஒரு சில பகுதிகளில் குப்பையில் வீசப்பட் டுள்ள அரசாணிக்காய் கால்நடைகள் உணவாக மாறி வருகிறது.

ஆனைமலை சுற்றுப்பகுதிகளான சேத்துமடை, சோமந்துரை, வேட்டைக் காரன்புதூர் மற்றும் வடுகபாளையம், உடுமலை, கோலார்பட்டி பகுதிகளில் அரசாணிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் காய்கள், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பபடுகிறது. பொள்ளாச்சி சந்தையிலிருந்து, 90 சதவீதம் காய்கள் கேரளப்பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தோட்டங்களிலிருந்து, சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பும் போது விற்பனை விலையை விட 1.50 ரூபாய் குறைவாக விலை நிர்ணயித்து வியாபாரிகள் கொள்முதல் செய்வர். சந்தைகளில், ஏற்று, இறக்கு கூலி சேர்த்து கொள்முதல் விலையை விட இரண்டு ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்படும்.

தற்போது, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் அரசாணிக்காய் விலை அபரிமிதமாக உள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக, 10 டன் வரத்தாக உள்ள சமயத்தில் இந்த வாரம் 30 டன் அரசாணிக்காய் வரத்தாக உள் ளது. கேரளாவுக்கு 29 டன் அரசாணிக்காய் விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.

வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள், ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் ஐந்து ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரசாணிக்காய் தற்போது சந்தைகளில் கிலோ மூன்று ரூபாய்க்கு விற்கிறது. தோட்டங்களில், அதிகபட்சமாக ஒரு ரூபாய் வரை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரசாணிக்காய்க்கு ஏற்ற விலை கிடைக்காததால், தோட்டங்களில் அபரிமிதமாக உள்ள காய்களை குப்பையில் கொட்டுகின்றனர். அப்பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது.

பொள்ளாச்சி பகுதி வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், அரசாணிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதற் கேற்ப பருவ மழை பொழிவு இருந்ததால், விளைச்சல் அபரிமிதமாக உள்ளது. இதனால், விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. வரும் வாரத்தில், விளைச்சல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், விலை மேலும் சரியும். ஒரு கிலோ அரசாணிக்காய் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்படும். அப்போது, தோட்டங்களில் கொள்முதல் செய்யும் விலை மேலும் சரியும் என்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports