ஆட்கள் பற்றாக்குறை : வாழை சாகுபடியில் விவசாயிகள்

கிணத்துக்கடவு பகுதியில், கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையால்,விவசாயிகளே வாழை, சாம்பார் வெள்ளரி, மரவள்ளியை சாகுபடி செய்கின்றனர்.

இதில், கதலி வாழை கன்றுகள் நடப்பட்டுள் ளன. இக்கன்றுகள் சரியாக 11 மாதம் முதல் 12 மாதத்திற்குள் வாழை வருகிறது. இதற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சிக்கொள்ள வேண்டும், இதில் கூலி தொழிலாளர்களுக்கு

அதிகமாக வேலை இல்லை. சிறிய வேலைகளை விவசாயிகளே செய்து கொள்ளலாம். வாழைத்தார்களை கேரளாவில் உள்ள வியாபாரிகள் நேரடியாக வந்து, கதலி வாழைப்பழங்களை கிலோ ஒன்றுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை கொடுத்து, எடுத்து செல்கின்றனர். மரவள்ளியும், சாம்பார் வெள்ளரியும் அவர்களே எடுத்து செல்வதால், கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.

இதற்காக விவசாயிகள் செலவு செய்ய வேண்டியதும் இல்லை. இவ்வகை சாகுபடிக்கு, விவசாயிகளுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports