குறுகிய காலப் பயிரையே விவசாயிகள் பயிரிட வேண்டும்

மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் குறுகிய காலப் பயிரை மட்டுமே விவசாயிகள் பயிரிடுவதுடன், அதை குறிப்பிட்ட நாளில் அறுவடை செய்ய வேண்டும் என்று சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு பாசன கால்வாயை பாசனத்துக்கு திறக்கும் நிகழ்ச்சி மேட்டூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் கலந்து கொண்டு பேசியது:

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் நான்கரை மாதங்களுக்கு தண்ணீர் விடப்படும்.

2004-05ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கால்வாய் திறக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால பயிரையே பயிரிட வேண்டும் என்றார்.

பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கணேச மாரச்சன், மேட்டூர் கோட்டாட்சியர் வேலு, முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், செயற் பொறியாளர் சந்திரசேகரன், உதவி செயற் பொறியாளர் குமாரசாமி, மேட்டூர் நகராட்சி ஆணையர் கணேசன், துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports