கோரை களையை அகற்ற யோசனை

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில், எளிதில் அழிக்க முடியாத கோரை களைகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன.

விளைநிலங்களில் வளரும் புற்கள், கீரைசெடி, பார்த்தீனியா, கோரை, அருகம்புல் உள்ளிட்ட களைகள் பெரும் பிரச்னையாக உள்ளன. இவற்றில் கோரை மற்றும் அருகம்புல் பல பருவங்களுக்கும் தொடர்ச்சியாக உள்ளன. களையெடுத்தாலும், இவற்றின் கிழங்கு பூமிக்குள் தொடர்ந்து இருப்பதால் முற்றிலும் அழிப் பதில் சிரமம் ஏற்படுகிறது. தற்போது பெய்த மழையால், அதிகமான விளைநிலங்களில் கோரை வளர்ந் துள்ளது. உழவு செய்தாலும், முற்றிலும் அழிந்து விடாமல், தொடரும் நிலையே உள்ளது. அவை, ஆவணிப்பட்ட பயிர் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளன.

வேளாண் துறை துணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன் கூறுகையில், ""கோரையை கட்டுப்படுத்த, "கிளைபோசேட்' என்ற வேதிபொருளை உள்ளடக்கிய பூச்சிகொல்லி மருந்து உபயோகிக்க வேண்டும். பயிர் சாகுபடி செய்வதற்கு முன், பசுமையாக வளர்ந்திருக்கும் நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வகை பூச்சிக்கொல்லி அனைத்து பயிர்களையும் அழித்து விடும். மருந்து தெளித்த ஒரு மாதத்துக்கு பயிர் செய்யக்கூடாது; மருந்தின் தன்மை மண் ணில் தொடர்ந்து இருக்கும். மருந்துக்கு மாற்றாக, நிலத்துக்குள் இருக்கும் கிழங்கை முற்றிலும் வெளியே எடுத்து, வெயில் மூலம் அழிக்கலாம்,'' என்றார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports