குடிநீர் குழாயில் கொட்டியது பணம்

ஆந்திராவில் இருந்து விறகு லோடு ஏற்றிய லாரி ஒன்று வியாசர்பாடி வழியாக வண்ணாரப்பேட்டை நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. வியாசர்பாடி, ரயில்வே பாலத்தின் கீழே லாரி செல்ல முயன்றபோது சிக்கல் ஏற்பட்டது. லாரியில் அதிக உயரத்திற்கு விறகுக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால், பாலத்திற்குள் நுழைய முடியவில்லை. வேகமாக மோதிய லாரி, பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.

இதில் பாலத்தின் மேல் பகுதியில் சென்ற குடிநீர் பைப் உடைந்தது. தண்ணீர் பீச்சியடித்தது. தண்ணீருடன் ^50, ^100 நோட்டுகளும் கொட்டின. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பணத்தை எடுக்கப் போட்டி போட்டனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது, விஷயம் போலீசுக்கு போனதும், போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தனர். ரூபாய் நோட்டுக்களை எடுக்க முட்டி மோதிய பொதுமக்களை விரட்டி அடித்தனர். முதலில் பாலத்தின் அடியில் சிக்கிய லாரியை மீட்டனர். மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாயில் இருந்து பணம் கொட்டியது எப்படி? திருட்டுப் பணத்தை குடிநீர் குழாயில் பதுக்கி வைத்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports