செம்மை நெல் சாகுபடியில் இடு பொருள் இலவசம்

சிவகங்கை: செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய்க்கு, இடு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நீர், நிலவள திட்டத்தில், இரண்டரை ஏக்கர் பாசன வசதியுள்ளவர்களுக்கு நெல் விதை, தக்கை பூண்டு, உரம், பயிர்பாதுகாப்பு மருந்துகள் கிடைக் கும். விதை கிராம திட்டம்: குமரத்தகுடிப்பட்டி, சாத்தினிப்பட்டி, எம்.வையாபுரிப்பட்டி விவசாயிகளுக்கு, "ஏ.டி.டி.,-39, 45, நெல்விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் கர்நாடகா பொன்னி, ஏ.டி.டி.,- 45 விதைகள், ஐந்து ரூபாய் மானியத்தில் கிடைக்கும். நெல்லில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த வசம்பு மூலிகை 50 சதவீத மானியத்தில் கிடைக்கும். விவசாயிகள் சிங்கம்புணரி வேளாண் வளர்ச்சி மையத்தை அணுகலாம் என உதவி இயக்குனர் முத்துஎழில் தெரிவித்தார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports