எல்ஐசி-யின் உத்தரவாத ஓய்வூதிய திட்டம் இன்று அறிமுகம்

மத்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) உத்தரவாதமான ஓய்வூதிய திட்டத்தை வியாழக்கிழமை (செப்.2) அறிமுகம் செய்ய உள்ளது. பங்குச் சந்தையுடன் இணைந்த இந்தத் திட்டத்துக்கு 4.5 சதவீத உத்தரவாதமான பலன் கிடைக்கும். இது "பென்ஷன் பிளஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகள் உள்ளதாக எல்ஐசி-யின் மூத்த கோட்ட மேலாளர் (தில்லி) டி.ஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்திட்டத்தை தேர்வு செய்வோருக்கு 4.5 சதவீத வட்டி உத்தரவாதமாகக் கிடைக்கும். பாலிசி முதிர்வடையும்போது காப்பீடு செய்த தொகையில் மூன்றில் ஒருபங்கை மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

எஞ்சியுள்ள இரண்டு பங்கு தொகைக்கான வட்டி மாதந்தோறும் அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும். இதை காப்பீடு செய்வோர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏ) மற்றும் யு-லிப் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports