கேரள முன்னாள் மந்திரி மகள் தற்கொலை

கேரள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருப்பவர் நீலலோகிதாசன் நாடார். கடந்த இடதுமுன்னணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது செயலாளராக இருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி நளினி நெட்டோவை மானபங்கப்படுத்த முயற்சித்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்டது. நீலலோகிதாசன் மகள் திவ்யா (28), திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் திருமலையில் உள்ள வீட்டில் திவ்யா நேற்று மாலை தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து பூஜப்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports